Load Image
dinamalar telegram
Advertisement

புலம்பும் தொண்டர்கள்!

Tamil News
ADVERTISEMENT
'இன்னும் ஒன்றரை ஆண்டு ஆட்சி கைவசம் உள்ளது; அதை அனுபவிக்க விடமாட்டார் போலிருக்கிறதே...' என்று தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை பற்றி புலம்புகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.


இம்மாநிலத்தில் அடுத்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்நடக்கவுள்ளது. இதுவரை, தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை இருந்தது. சமீபகாலமாக, பா.ஜ., இங்கு அழுத்தமாக கால் பதித்து வருகிறது.அதனால், கடுப்பான சந்திரசேகர ராவ், பா.ஜ., மீது கடும் கோபத்தில் உள்ளார். இந்த கோபத்தை எப்படி வெளிப்படுத்தவது என்று தெரியாமல், என்னென்னவோ செய்து வருகிறார்.


ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் எந்த மாநிலத்துக்காவது வந்தால், அவர்களை முதல்வர் நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்பது மரபு. கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி, தெலுங்கானாவுக்கு மூன்று முறை வந்துள்ளார். ஒருமுறை கூட சந்திரசேகர ராவ், பிரதமரை வரவேற்க நேரில் செல்லவில்லை; இது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினரோ, 'மத்திய அரசை பகைத்தால், சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகள் தொல்லை கொடுக்கும்; ஆட்சியும் பாதியிலேயே பறிபோகும். இதெல்லாம் தெரிந்தும், தெரியாதது போல சந்திரசேகர ராவ் இருப்பது தான் வேதனையாக உள்ளது...' என்று புலம்புகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement