ADVERTISEMENT
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜ., பெண் பிரமுகர் திவ்யா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த நிலையில், போலீஸ் ஏ.டி.ஜி.பி அம்ரித் பாலை சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி-யிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் முதன்முறையாக பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நாடு நாசமாக போவதற்கு இதுபோன்ற போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான் காரணம்.