ஓட்டெடுப்பில் மஹாராஷ்டிரா அரசு வெற்றி: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 164 ஓட்டுகள்


இவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை உறுதி செய்ய இன்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எம்எல்ஏ.,க்கள் எழுந்து நின்று யாருக்கு ஆதரவு என தெரிவித்தனர். இந்த ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு எண்ணப்பட்டதில் ஷிண்டேவுக்கு ஆதரவாக 164 ஓட்டுக்கள் பதிவானது. அவருக்கு எதிராக 99 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இதனையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (20)
பாட்னவிஸ் முதல்வரானார் என்றால் எப்பொழுதும் ஷிண்டே அவரது ஆதரவை கைவிடலாம் அப்போது பி ஜே பி அரசும் கவிழ்ந்து விடும். பதவி அல்ல கட்சி தான் முக்கியம் என்று எப்போதும் பி ஜே பி உறுப்பினர்கள் நினைப்பதால் இப்போது உத்தவ் தாக்கரேயை பி ஜே பி உதவாக்கரை ஆக்கிவிட்டார்கள். அடுத்த தேர்தலில் பாட்னவிஸ் பெரும்பான்மையுடன் முதல்வர் ஆகி விடுவார்
பட்னாவிஸ் முதல்வர் ஆகியிருக்க வேண்டும். ஷிண்டே மஹாராஷ்ட்ராவை குட்டிச்சுவர் ஆகிவிடுவார்.
தாக்கரே தனது கட்சி நபருக்கு எதிராகவே தாக்கரே எதிர் வாக்கு பதிந்தாரோ ..இது தான் கர்மா
கடைசியில் அவர் முன்னாள் ஆட்டோ ஓட்டுனரை முதல் மந்திரியாக ஆக்கி விட்டார்.
எல்லா பொதுக் கூட்டங்களிலும் பட்ணவீஸ்தான் முதல்வர் என்றுதான் பேசப்பட்டது. பவரின் தூண்டுதலின் பேரில் சஞ்சய் ரௌத் உத்தவுக்கு ஆசை காட்டி இப்பொழுது கட்சியே கையை விட்டுப் போகும் நிலை.
வாடகைக்கு குடி இருக்கவந்தவன் வீட்டின் சொந்தக்காரனை காலி செய்யச் சொன்னதாக சரித்திரம் இருக்கிறதா? இது வரலாறு காணாத மோசடி. இதற்க்கு பின்புறம் எந்த கட்சி?