ADVERTISEMENT
குலு: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்திலிருந்து சைன்ஜ் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் உள்பட பொது மக்களை 40 பேருடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இன்று (ஜூலை 04) காலை 8 மணி அளவில் நியோலி-ஷான்சர் சாலையில் சென்றபோது ஜங்லா பகுதியில் இருந்த பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அது என்ன குறிப்பிட்ட மாநிலங்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமெர் நேரடி உதவி பண்றாரு? மாநில அரசு என்ன பண்ணுது?