Load Image
dinamalar telegram
Advertisement

"இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்" - ஸ்டாலின் உறுதி

சென்னை: சாதி, மதத்தால் நம்மை பிரிக்கும் சக்திகைள பின்னுக்கு தள்ளி ஒன்ணிணைந்து முன்னேற பாடுபடுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.Latest Tamil News
வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றியதாவது: தமிழையும், தமிழ் இனத்தையும் காக்கும் அரசாக திமுக விளங்குகிறது. தமிழ் மொழியை காத்திட பல்வேறு நடவடிக்கைள் எடுத்துள்ளோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவது என்ற குறிக்கோளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது திமுக அரசு. இது நம்முடைய அரசு என்று தான் சொல்லி வருகிறேன். திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழர்களுக்கு பெருமை இருப்பது சான்றுகளால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.வெளி நாடு வாழ் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். வெளிநாடு வாழ் வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளேன். சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.Latest Tamil Newsதமிழகத்தை பிளவுப்படுத்தும் சாதி , மத சக்திகளை புறந்தள்ள வேண்டும். இறை நம்பிக்கை அவரவர் உரிமை . அதில் தலையிட மாட்டோம். திராவிடம் என்ற சொல்லை திட்டமிட்டுத்தான் குறிப்பிட்டு வருகிறேன். இது ஒரு இயக்கத்தின் பெயராக உள்ளது.
திராவிட ஆட்சியை எதிர்ப்பவர்கள் , உள்ளனர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் . இதனை எதிர்ப்பவர்கள் தான் திராவிடத்தை எதிர்க்கின்றனர். இவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றனர். தமிழால் இணைவோம் என்ற நோக்கில் நம்மை பிளவுப்படுத்தும் எண்ணங்களை பின்னுக்கு தள்ளி நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். சாதியையும், மதத்தையும் தாண்டி செயல்படுவோம். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் .


வாசகர் கருத்து (183)

 • Dharmavaan - Chennai,இந்தியா

  போதிய தமிழ் அறிவே இல்லாமல் தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கிறான் இவர் நிராகரிக்க பட வேண்டும்

 • ravi - chennai,இந்தியா

  குரானும் பைபிளும் இரண்டு மதங்களையும் தவறாக வழிநடத்துகின்றன. மற்ற கடவுள்களை சைத்தான், சாத்தான் என்று சொல்லி பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை, பிரிவினைவாதத்தை விதைப்பவை மதங்களாக ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் ஆடை அணிகலன்களை திருட்டுக்கு ஏதுவாத பயன்படுத்தினால் அது அந்தமதத்தின் சீரழிவை காட்டுகிறது. சமீபத்தில் புர்கா அணிந்த பெண்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடுவது செய்திகளில் அடிக்கடி வருகினற்ன. சூப்பர்மார்கெட் நடத்துவோர் இதை கருத்தில் கொள்ளவேண்டும். இந்துமதத்தை இழிவுசெய்ய நினைக்கும் ஓநாய்களுக்கு ஆண்டவன் தக்கதண்டனை கொடுப்பான் என்பது நிச்சயம்.

 • ravi - chennai,இந்தியா

  கலைஞர் குடும்பத்தில் துர்கா சனாதனம். ஸ்டாலின் ஊழலுக்கான சமாதானம். உதயநிதி மன்னராட்சிக்கான சமாதானம். மற்றவர்கள் கொள்ளையில் பங்குக்கான சமாதானம்.

 • ravi - chennai,இந்தியா

  ஒரு இந்துவின் ஒரு தாழ்மையான வேண்டுகோள்-தமிழ்நாட்டில் அறநிலையத்துறை என்ற பெயரில் ஒரு ஊழல் கூட்டம் சொத்துக்களை சுரண்டி சுரண்டி அரசுக்கும் அவர்களுக்கும் பொருள் சேர்க்கிறது. கோயில் சொத்துக்கள் இந்துக்களால் இந்துக் கோயில்களுக்காக இந்துக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டன. முஸ்லிமோ கிறித்துவோ ஒரு பைசா அந்த சொத்தில் பங்கெடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இந்து சொத்துக்களை கையாளும் பொறுப்பை மாற்று மதத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர்கள் மதத்தின் பெருமையை புரியாதவர்கள். செருப்பை போட்டுக்கொண்டு கோயில்களில் உலவுகிறார்கள். கோயில் பணத்தை கார் சம்பளம் இத்தியாதி என்று ஆடம்பரமாக இருக்கிறார்கள். அதுவே ஒரு இந்து மசூதிகளில் சர்ச்களில் புகுந்து அதன் சொத்துக்களில் ஆடம்பரங்களை அனுபவிக்கமுடியுமா? அறநிலையத்துறை என்பது மக்களின் நல்வாழ்வுக்காக அர்பணிப்புக்காக இருக்கலாம். நாட்டை நடத்த அதன் பணத்தை சொத்துக்களை பயன்படுத்த ஆட்சியாளர்களுக்கு 0.0000001 சதவீதம் கூட உரிமையில்லை. இந்துக்களில் ஒரு நல்லவர் உச்சநீதிமன்றத்தில் மனு போடுங்கள். இதை தடுத்து நிறுத்தவேண்டும். ஏற்கனவே ஊழல் திமுக தங்கத்தை எடுத்து உருக்க ஆரம்பித்துவிட்டது. இதில் நிச்சயம் ஊழல் இருக்கும். இதையெல்லாம் நிரூபிக்கமுடியாது. அவர்களின் விஞ்ஞான ஊழலுக்கு ஆதாரம் இருக்காது. தயவு செய்து அறநிலையத்துறை என்னும் ஊழல் முதலையை தமிழ்நாட்டிலிருந்து தூக்கி எறியுங்கள். திமுகக்காரன் கோயில்களை சூறையாடிவிட்டுதான் போவான். மேலும் அறநிலையத் துறையின் முஸ்லிமும் கிருத்துவும் ஆட்சி செய்கிறான். முக்கால்வாசி ஊழல் அரசு ஊழியர்கள் கோயிலுக்குள் செருப்பு போட்டு நடக்கிறார்கள். அவர்களுக்கு இந்துக்கடவுள்களின் அருமை தெரியாது.

 • ravi - chennai,இந்தியா

  எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை-7.17 கோடி அபராதம் என்று அபுதாபி அரசு சொல்கிறது. இந்தியா அப்படி சொன்னால் தினம் குறைந்தது 100 திமுக கொத்தடிமைகள் உட்பட ...நண்பர்கள் சிறைக்கு செல்வார்களே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்