Load Image
dinamalar telegram
Advertisement

நாடு பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது: காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு

Tamil News
ADVERTISEMENT
மதுரை : ''நம் நாடு சில பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது ,''என, மதுரையில் நடந்த ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயண பிரசார கூட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது: மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதை ஸ்டாலின் கைவிடும் வரை கவர்னரின் ஆலோசகர் என்று தான் அவரை அழைப்போம். ஆனால் அதுவரை அவரது ஆட்சி இருப்பது சந்தேகம். அமைச்சர் செந்தில் பாலாஜி 40 எம்.எல்.ஏ., க்களை பிடித்து வைத்துள்ளார் என தகவல் வருகிறது. அப்படியென்றால் மஹாராஷ்டிராவிற்கு வந்த நிலை தமிழகத்திற்கும் வரும்.

இன்றைய ஆட்சியாளர்கள் மதுரை, தருமபுர ஆதினங்களை மிரட்டுகிறார்கள். ஆனால் கோயில்கள் முன்னுள்ள ஈ.வெ.ரா., சிலைகளை அகற்ற வேண்டும் என மன்னார்குடி ஜீயர் மிக தைரியமாக அறிக்கை விட்டுள்ளார். அதை பாராட்டுகிறேன். ஏதோ தமிழன்னை ஓவியம் தயாரிப்பதாக சொல்கிறார்கள். பாதிரியார் ஜகத் கஸ்பருக்கு தைரியம் இருந்தால் தமிழன்னை ஓவியத்தை 'சர்ச்' களில் மாட்டி வைக்கட்டும்.Latest Tamil News
ஸ்டாலின் உடல்நலத்திற்காக 10 நாள் யாகம் நடத்த மனைவி ஏற்பாடு செய்வதாக அறிகிறேன். 2026க்குள் தி.மு.க., காணாமல் போகும். ஜூலை 31 ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயணம் முடியும் போது மதசார்பற்ற நாடு என இந்த அரசு அறிவிக்க வேண்டும், என்றார்.

மாநில செயலாளர்கள் முத்துக்குமார், சேவுகன், பொதுச் செயலாளர் கிஷோர் குமார், ஹிந்து வழக்கறிஞர் குழு மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் செல்வகுமார், தலைவர் அழகர்சாமி, பொதுச் செயலாளர் கலாநிதி மாறன், இணை அமைப்பாளர் ராஜேஷ் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (12)

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    பிஜேபி ஆட்சியை அவுங்க ஆளுங்களே சொல்றாங்கோ ....

  • ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    உனக்கு நாக்குல சனி கூடிய சீக்கிரம் களி திங்க ரெடியா இரு

  • Chandra - Chennai,இந்தியா

    ஆமாம் ஐயா .. ..இந்தியா பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது..

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    UNION GOVERNMENT என்பதற்கு இவருக்கு தமிழில் அர்த்தம் தெரியவில்லை. கவர்னரின் ஆலோசகர் என்பதற்கு இவருக்கு ஆங்கில அர்த்தமும் புரியவில்லை. ADVISOR TO GOVERNOR என்பவர் ஒரு மாநில ஜனாதிபதி ஆட்சியின்போது கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் ஒரு அரசு உயர் அதிகாரி.

    • jayvee - chennai,இந்தியா

      கவர்னர் ஆலோசனை கொடுப்பது மட்டுமல்ல, மாநில அதாவது குன்றிய அரசுகள் தவறு இழைக்கும்போது அவர்களின் தலையில் குட்டவும் அவருக்கு அதிகாரம் உண்டு.. அவர் ஜனாதிபதியின், மாநிலத்திற்கான முதன்மை பிரதிநிதி என்பதை மறந்துவிடாதீர்கள்

  • Tamil - Trichy,இந்தியா

    அவர் ஆளும் மத்திய அரசைதான் அப்படி வாய் தவறி உண்மையை உளறிவிட்டாற்போல இருக்கு.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்