கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கை; வேகப்படுத்த டி.ஜி.பி., உத்தரவு
சென்னை-'கந்து வட்டி கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கந்துவட்டி கொடுமை காரணமாக, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார், 27, கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கந்து வட்டி பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள, 'ஆப்பரேஷன் கந்துவட்டி' என, திட்டம் துவக்கப்பட்டுள்ளது.'நிலுவையில் உள்ள, கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வாங்கியவர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட வெற்று காகிதங்கள், சட்ட விரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சுற்றறிக்கை வாயிலாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு போலீசாரின் நடவடிக்கை இல்லை. கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முட்டுக்கட்டை
எனவே, கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கந்து வட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எவ்வித சமரசமும் கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
ரவுடிகளுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ; அதேபோல இருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் பற்றியும், உளவுத்துறை போலீசார் வாயிலாக தகவல் சேகரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (4)
சைக்கிள் ரைடிங்க் இன்றைக்கு எந்தப்பக்கம்? இன்று டீயா? இளநீரா?
கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பச்செலுத்த வேண்டியதில்லை என்று அரசாணை வெளியிடுவார்களா?
அரசாங்கமே செலுத்துனு சொல்லலாமே
காவல்துறையும் கந்துவட்டியும்-காவல்துறை கந்துவட்டிக் கொடுமை காரணமாக இருக்கும் மக்களை காப்பாற்றாமல் தற்கொலை செய்துகொண்ட பிறகு விசாரணை செய்வதில் என்ன லாபம். கந்துவட்டியில் ஈடுபடுபவர்களை இன்டெலிஜென்ஸ் மூலம் காவல்துறை அறிந்துகொள்ளமுடியாதா? திமுகக்காரன் என்பதால் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறதா? அடுத்ததாக எல்லா தனியார் லோன் ஆஃப்களையும் ரத்து செய்ய -சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்வது அதிகமாகிவிட்டது. டிஜிட்டலை தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகளுக்கு தண்டனையை கடுமையாக்குங்கள். இன்னும் செயின் திருட்டு குறைந்தபாடில்லை. செயின் திருடன் என்று அவர்கள் நெற்றியில் பச்சை குத்துங்களேன்.