ADVERTISEMENT
புதுடில்லி-ஏராளமான ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாமுக்கு சென்றதால், 'இண்டிகோ' நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக வைத்து செயல்படும் இண்டிகோ நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் 1,600 விமானங்களை இயக்கி வருகிறது.நேற்று இந்த நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிறுவன ஊழியர்களில் பலர் நேற்று விடுமுறை எடுத்ததே அதற்கு காரணம் என தெரிய வந்துஉள்ளது.டாடா குழுமத்தின், ஏர் இந்தியா நிறுவனத்தில் நேற்று வேலைக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது.
கொரோனா பரவல் காலத்தில் குறைக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் உயர்த்தாததால் அதிருப்தியில் இருந்த இண்டிகோ ஊழியர்கள் நேற்று விடுமுறை எடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது. இண்டிகோ நிறுவனத்தில் நேற்று 45 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு வந்திருந்தனர்.
அதனால், விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, பயணியர் அவதிப்பட்டனர்.இந்நிலையில், நேற்று ஏற்பட்ட பாதிப்புக்கு விளக்கம் அளிக்கும்படி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம், இண்டிகோ நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மத்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 'டாடா சன்ஸ்' குழுமம் சமீபத்தில் விலைக்கு வாங்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!