Load Image
dinamalar telegram
Advertisement

தேஜஸ் விமானம் வாங்க மலேஷியா விருப்பம்

புதுடில்லி-நம் நாட்டு தயாரிப்பான, 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்குவதற்கு மலேஷியா ஆர்வம் காட்டி வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
Latest Tamil News
மத்திய அரசு நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' தலைவரும், நிர்வாக இயக்குனருமான மாதவன் கூறியதாவது:தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் விமானப் படைக்கு புதிய போர் விமானங்கள் வாங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நம் நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்கள் மீது அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. இதற்கான பேச்சு நடந்து வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புஉள்ளது.
Latest Tamil News சீனாவின், ஜே.எப் 17, தென் கொரியாவின் எப்.ஏ 50, ரஷ்யாவின் மிக் 35 மற்றும் யாக் 130 போர் விமானங்களுக்கு கடும் போட்டியாக, நம் தேஜஸ் திகழ்கிறது. நம்மிடம் இருந்து தேஜஸ் போர் விமானங்களை மலேஷியா வாங்கும் பட்சத்தில், அவர்களிடம் உள்ள ரஷ்யாவின் சுகோய் 30 போர் விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் சேவைகளை அவர்கள் நாட்டிலேயே அமைத்து தர உறுதி அளித்துள்ளோம். இந்த உறுதியை மற்ற நாடுகளால் அளிக்க முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதே சமயம் ஜாகிர் நாயக்கையும் வைத்திருக்கிறார்கள். அவனை பிடித்துக்கொடுத்து விமானத்தை வாங்கிக்கொள்ள அறிவுருத்த வேண்டும்..

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    சபாஷ் நம் விமானங்கள் மற்ற நாடுகளில் கூட போற்றப்படுகிறதென்றால் நாம் இனியும் வளரும் நாடு சொல்வதில் பொருளில்லை

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    மலேஷியா நட்பு நாடு அல்ல. அவர்கள் வாங்குவது வேறு நோக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இவனை நம்ப கூடாது. மத வெறி பிடித்தவன். ஏதாவது யேடாகூடாமாக செய்வான். .

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்