Load Image
dinamalar telegram
Advertisement

வாழ்விழந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் : பிரதமர்

ஐதராபாத்: வாழ்விழந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். அவர்களை பா.ஜ.,கேலி செய்ய கூடாது. அதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
Latest Tamil News

தெலங்கானா மாநிலம் ஐ தராபாத் நகரில் நடைபெற்ற பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தங்கள் இருப்புக்காக போராடி வரும் பல்வேறு கட்சிகளை பார்த்து நாம் சிரிக்கவோ கேலி செய்யவோ கூடாது. அதற்கு பதிலாக நாம் அவர்களிடம் இருந்து பாடத்தை கற்று கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் செய்த தவறுகளை போன்று செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்க வேண்டும். வாரிசு அரசியல் மற்றும் குடும்ப அரசியலால் மக்கள் சலிப்பு அடைந்துள்ளனர்.

தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் கட்சித்தொண்டர்கள் துணிச்சலுடன் போராடி வருகின்றனர். அவர்களின்செயல் பெருமை கொள்கிறது.
Latest Tamil News

கிராமப்புறங்களிலும் கவனம்



நாங்கள் தொழில்நுட்பத்தி் மட்டும் கவனம் செலுத்தாமல் கிராமப்புற பிரச்னைகளிலும் கவனம் செலுத்துகிறோம். ஐ தராபாத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் கட்டப்படும் ஏழு ஜவுளி பூங்காக்களில் ஒன்று தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்படும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் இரட்டிப்பாகி உள்ளன. 31 ஆயிரம் கோடி ரூபாயில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்துள்ளது. என பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (9)

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    கழகம் எப்போ சேனாவாக மாறும்

  • Arachi - Chennai,இந்தியா

    இவரிடமிருந்து மக்கள் பல பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மத நல்லிணக்கம் எப்படி இருக்க வேண்டும், பல மொழிகள் பேசும் இத்தாய் திரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்கவேண்டும் என்ற பல நல்ல நல்ல பாடங்களை கற்றுக்கொண்டு வருகிறோம் எனவே பிஜேபி யிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • ஆரூர் ரங் - ,

      எங்கோ ஐ நா சபை யில் கூட தமிழின் பெருமை பேசுகிறார். ஊனக் கண்களுக்கும் கேட்காத காதுகளுக்கும் அவரைப் புரிந்து கொள்ளும் சக்தி இருக்காது. ஒன்றை மறந்து விட்டேன். அன்னிய உருது மொழியை தமிழகத்தின் ஆட்சி மொழி மற்றும் பயிற்று மொழியாக ஆக்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி என்னானது?

  • Sai - Paris,பிரான்ஸ்

    பிறகும் நம் ஏன் போகுமிடமெல்லாம் சொல்லி புலம்ப வேண்டும்? முடிந்து போன கதையை விடு

  • அப்புசாமி -

    உங்க கிட்டேயிருந்து மக்கள் சீக்கிரம் பாடம் கத்துப்பாங்க. உங்களுக்கும் பாடம் புகட்டுவாங்க.

    • Aarkay - Pondy

      ஒரு ஹவாலாவின் கதறல்....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    வாழ்விழந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் : பிரதமர் - எந்த கட்சியை கூறுகிறார் என்று உங்கள் எல்லோருக்கும் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். ஆம், முழுகி கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைத்தான் அவர் கூறுகிறார்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்