ADVERTISEMENT
ஐதராபாத்: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்கது என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., செயற்குழு கூட்டம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, திரவுபதி மற்றும் அவரது வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளார். அவரது வாழ்க்கை துவக்கம் மற்றும் அவரது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் மற்றும் எதற்காக அவர் போராடினாரோ அதனை அடைய திரவுபதி தவறவில்லை எனக்கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திரவுபதியின் பொது வாழ்க்கை மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அவர் பணியாற்றியது குறித்து எடுத்துரைத்த மோடி, அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஜனாதிபதியாகி நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்றார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்கது. அரசியலை தாண்டி அவர் நிறுத்தப்பட்டுள்ளார் என மோடி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பிரதமர் மோடி பெருமிதம். தனக்குத்தானே பெருமிதம் அடைந்ததை பல முறை பார்த்திருக்கிறோம்.