Load Image
dinamalar telegram
Advertisement

அழகான பெண்களுக்கே கூடுதல் சம்பளம் கிடைக்கும்: எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை

Tamil News
ADVERTISEMENT
திண்டுக்கல்: ஆண்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும், பெண்கள் அழகாக இருந்தால் மட்டுமே வேலை மற்றும் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் பள்ளிகல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு என்ற உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
Latest Tamil Newsஇதில், கலந்து கொண்ட வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியதாவது: இன்றைக்கு உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகளில் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை பார்ப்பதில்லை. மதிப்பெண் முக்கியம் என்றாலும், அவர்கள் உங்களுக்கு உள்ள ஆங்கில அறிவுத்திறனை பார்க்கிறார்கள். நீங்கள் தெளிவாகவும், விரைவாகவும் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பதை தான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆங்கில திறன் இல்லாமல், நீங்கள் தலைகீழாக நின்றாலும் எந்த பயனும் இல்லை. அதிக சம்பளம் வேண்டும் என்றால், நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும். பெண்களாக இருந்தால், அழகாக இருக்க வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு, அங்கிருந்த அதிகாரிகள், மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (72)

  • sankar - சென்னை,இந்தியா

    சேர்த்திருக்காரே.

  • sankar - சென்னை,இந்தியா

    உன் அழகு மூஞ்சிக்கு எம்மெல்லே சம்பளம் தர்றதே தப்பு. உனக்கு வேற எங்கேயும் வேலை தரமாட்டாங்க.

  • sankar - சென்னை,இந்தியா

    இந்த எம்மெல்லாவைப் பார்த்தா இங்கிலீஷ் தெரிஞ்ச மூஞ்சா தெரியல. What is sauce for the goose is sauce for the gander too ன்னு ஒரு ஆங்கிலப் பழமொழி இருக்கு. அதுக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்க நியாயமில்ல.

  • ravi - chennai,இந்தியா

    திமுகவில் எப்படிப்பட்ட கேவலமானவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒரு முறை உதயநிதி தமிழச்சி என்று சொல்லி ஒரு வேட்பாளரை அறிமுகப்படுத்தினார். வெட்கமில்லாமல் மேடையிலேயே அவரை வர்ணித்தார். அந்த பெண்ணும் அறிவில்லாமல் சிரித்துக்கொண்டு நின்றது. இந்தமாதிரி பசங்க தான் திமுகவில் உள்ளனர். அழாகாடா உங்களுக்கு ஆட்சி செய்ய உதவப்போகுது.

  • samvijayv - Chennai,இந்தியா

    இப்படி பேசிக்கிட்டு திரிஞ்ச திரு.பி டி. பழனிவேல்ராஜன் இப்ப தொகுதி பக்கம் இல்ல தொலைக்காட்சி பக்கமோ பார்க்க முடியவில்லை.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்