அதிமுக.,விடம் ராகுல் ஆதரவு கேட்டாரா ? காங்., விளக்கம்
புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக., தலைமையை ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
வரும் 18 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கியுள்ளனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு பழனிசாமியை தொலைபேசி மூலம் ராகுல் தொடர்பு கொண்டதாக செய்தி வெளியானது.
இதனை மறுத்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக.,வின் பழனிசாமியை தொலைபேசியில் ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் போலியானது மற்றும் தவறானது. அப்படி எந்த தொலைபேசி அழைப்பும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. அதனை தாங்கும் அளவுக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
வரும் 18 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கியுள்ளனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக.,வின் பழனிசாமியை தொலைபேசியில் ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் போலியானது மற்றும் தவறானது. அப்படி எந்த தொலைபேசி அழைப்பும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. அதனை தாங்கும் அளவுக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (10)
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது
ராவுளு ஒன் மேன் ஆர்மி.
ராவுளு தன்னிச்சையாக ஏற்காதாவது செய்ய காங்கிரஸ் கட்சியினர் சப்பையைக்கட்டு கட்ட வேண்டிய நிலை. குட்டி குலைத்து நாய் தலையில் விழுந்த கதை தான். பரிதாபம்.
யாரப்பா தவறான செய்தியை பரப்பிவிட்டது? அப்புறம் வீண் பாரத்தை முதுகில் ஏற்றிக்கொண்டு சுமந்து செல்ல ஆளில்லாமல் போயிவிடும். தயவுசெய்து இனி இப்படி செய்யாதீர்கள். இப்படிக்கு-கோராம் கொமேஷ்
ஜெய்ராம் ரமேஷ் சொல்வது.... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது
அப்படிக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை. அடுத்த எலக்ஷன் சுற்றில் பா.ஜ ஒரு பக்கமும் மற்ற எதிர்க்கட்சிகள் ஒருபக்கமும் நிற்கும் நிலை வரும். அதிமுக பலவீனமாகும். ஓவரா இந்தித்திணிப்பு போன்றவை வந்தால் இரு கழகங்கள் இணைய வாய்ப்புண்டு. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிற்றால் பா.ஜ வே காணாம போகிற வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தை யார் அறிவார்?