பழனிசாமி மீது ராகுலின் பாசம்
சென்னை: அ.தி.மு.க.,வில் நடக்கும் உட்கட்சி மோதலில், முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்டி, முன்னால் முதல்வர் பழனிசாமி கட்சித் தலைமையை கைப்பற்ற போகிறார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இந்நிலையில் பழனிசாமியிடம், காங்., முன்னாள் தலைவர் ராகுல் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.ராகுல் ஒருசில முறை பழனிசாமியுடன் பேசியுள்ளாராம்.
இதைத் தவிர, ராகுலுக்கு நெருக்கமாக உள்ள இரண்டு தமிழக காங்., - எம்.பி.,க்களும், அ.தி.மு.க.,வுடன் தொடர்பில் இருப்பது நல்லது என அவருக்கு ஆலோசனை அளித்துள்ளனராம்.பழனிசாமியும், பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர விரும்பவில்லையாம். அக்கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதுடன், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் மிரட்டலை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும் என்கிறாராம், பழனிசாமி.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றியவர் இந்த சுனில். பின் இவரே தனியாக நிறுவனம் துவங்கிவிட்டார். 2017ல் உ.பி.,யில் பா.ஜ.,விற்கு ஆலோசகராக இருந்துள்ள இவர், தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வெவ்வேறு தேர்தல்களில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.

காங்கிரஸ் ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் இருக்கும் நிலையில், பழனிசாமி மீது ராகுலுக்கு பாசம் வர காங்கிரசின் தற்போதைய தேர்தல் வியூக நிபுணர் சுனில் என சொல்லப்படுகிறது.பேரறிவாளன் விடுவிப்பு விவகாரத்தில் தி.மு.க., மீது கடுப்பில் உள்ள ராகுல், தமிழகத்தில் தி.மு.க.,வை கழற்றிவிட்டால், அதற்கு ஒரு மாற்று இருக்க வேண்டும் என்பதால் பழனிசாமியுடன் தொடர்பில் இருக்கிறாராம்.தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் மாறி மாறி கூட்டணி வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்துள்ளது. எனவே அ.தி.மு.க.,வை கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராகுலுக்கு சுனில் 'அட்வைஸ்' செய்துள்ளாராம்.
இதைத் தவிர, ராகுலுக்கு நெருக்கமாக உள்ள இரண்டு தமிழக காங்., - எம்.பி.,க்களும், அ.தி.மு.க.,வுடன் தொடர்பில் இருப்பது நல்லது என அவருக்கு ஆலோசனை அளித்துள்ளனராம்.பழனிசாமியும், பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர விரும்பவில்லையாம். அக்கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதுடன், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் மிரட்டலை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும் என்கிறாராம், பழனிசாமி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (12)
அம்மாவின் கட்சியை வச்சிக்கிட்டு அவர்கள் வீட்டிலே கொலை மற்றும் கொள்ளை அடித்த இந்த கும்பல் அஇஅதிமுக தொண்டனாக வேதனை படுகிறேன் விரைவில் இவர்களை கைது செய்து கட்சியை காப்பாற்ற வேண்டும்.
ராகுலுக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் என்பது மகா கேவலம்.சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். எவனை எவன் கொல்வதற்குத் திட்டமிட்டான் என்ற அடிப்படையில் ஒருவனை சாகும் வரையில் சிறை வைக்க எவனுக்கும் உரிமையில்லை.
துரோகிக்கு துரோகி உதவி செய்வது பொதுமக்களுக்கு ஆபத்து.மறுபடியும் பழனிச்சாமி அண்ணா தி மு க வை கைப்பற்றினால் தி முக விற்கு கொண்டாட்டம் கொங்கு மட்டுமே 40 எம் எல் எ கூட கிடைக்காது பிற பகுதியில் ஒரு சீட்டு கூட கிடைக்க வாய்ப்பு இல்லை.
இந்நிலை வருவது தோல்வியின் உச்ச கட்டம் முன்னாள் முதல்வர் அவர்களே
தலைவியின் எண்ணத்திற்கு எதிராக கூட்டணி கண்டதன் விளைவு கிடைக்கும் வாக்குகளை விட சறுக்கிய வாக்குகளே அதிகம்.