ADVERTISEMENT
மதுரை : மதுரை மாவட்டத்தின் 7 உழவர் சந்தைகளில் விவசாயிகள் கடை அமைக்க, காய்கறிகளை கொண்டுவர போக்குவரத்து வசதி மற்றும் தராசு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து தருகிறது.
இதற்கான விழிப்புணர்வு தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை நிலையம் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வேளாண் விற்பனை நிலைய துணை இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது: தோட்டக்கலை மூலம் காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. விளைவித்த காய்கறிகளை இடைத்தரகர் இல்லாமல் உழவர் சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்கலாம்.
சந்தைகளில் கூடுதல் கடை, கட்டமைப்பு ஏற்படுத்தவும் கடைகள் காலியாக உள்ள சந்தைகளில் விவசாயிகளை வரவழைக்கவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். விவசாயிகளுக்காக அதிகாலையில் பஸ் போக்குவரத்து இலவசம். உழவர் அடையாள அட்டை இருந்தால் கடை மற்றும் தராசு இலவசம். காய்கறிகளை கொண்டு வந்து விற்றால் போதும். தோட்டக்கலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அது சரி. உழவர் சந்தையில் வாங்குறவனுக்கு என்ன சலுகை தரப்போறீங்க? அவன் மட்டும் சொந்தக்காசைப் போட்டு சந்தைக்கு வரணுமா? உழவர்களை ஆன்லை வர்த்தகம், ஹோம் டெலிவரி செய்யற வசதிகளை ஏற்பஉத்திக்.குடுங்க. டிஜிட்டல் இந்தியா வந்து எத்தனையோ வருஷமாச்சு.