Load Image
dinamalar telegram
Advertisement

பழனிசாமிக்கு தி.மு.க., கண்டனம்

சென்னை-எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அ.தி.மு.க., முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தனக்கே தெரியாத சமூக நீதி குறித்து, தி.மு.க.,வுக்கு பாடம் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
Latest Tamil News


பட்டியலின சமூகத்தில் இருந்து, கே.ஆர்.நாராயணனை ஜனாதிபதியாக்கியது, தி.மு.க.,வும், கருணாநிதியும் தான். லோக்சபா சபாநாயகராக ஜெகஜீவன்ராம் மகள் மீரா குமார் தேர்வு செய்யப்படுவதற்கு, தி.மு.க., உறுதுணையாக இருந்தது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு, இட ஒதுக்கீடை உயர்த்தியது, உள் இட ஒதுக்கீடு அளித்து, உணமையான சமூக நீதியை அளித்தது, தி.மு.க., அரசும், கருணாநிதியும் தான். இது பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

Latest Tamil News
அதை தெரிந்து கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை. ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலர் பதவியில், தான் எப்படி குறுக்குசால் ஓட்டி அமர்வது, அதற்கு கோடி கோடியாக கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது என்ற ஆலோசனையில், அவர் மூழ்கியிருப்பதால், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்பது தெரியாமல் தவிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (10)

  • பேசும் தமிழன் -

    திமுக பேசுவது எல்லாம் போலி சமத்துவம்.... உண்மையிலேயே பழங்குடி மக்கள் மீது அக்கறை இருந்து இருந்தால் பழங்குடி இனத்தை சேர்ந்த திரௌவுபதி முர்மு வை அறிவித்த உடனே ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்

  • Hari - chennai,இந்தியா

    தி மு க வில் இவருக்கும் முதுகெலும்பு புதுசாக முளைக்கிறதுபோல தெரிகிறது ,முதல்வர் அறிக்கை விடுவதெல்லாம் நிறுத்திவிடடாச்சி இப்போது அல்லக்கைகள் சாராய கம்பெனி முதலாளிகள் அறிக்கை விடுவது (முதல்வர் ஆகலாம் என )ஆசைப்படுவதுபோல இருக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்

  • Mayuram Swaminathan - Chennai,இந்தியா

    சமூக நீதி பற்றி பீற்றிக்கொள்ளும் திமுக எதற்காக பீஜேபியில் வெகு காலம் இருந்து பலனை அனுபவித்த ஒரு முற்போக்கு சமூகத்தை சேர்ந்தவருக்கு ஆதரவு அளிக்கவேண்டும்?

  • தமிழன் - Madurai,இந்தியா

    " தி.மு.க., அரசும், கருணாநிதியும் தான். " - ரெண்டும் வேற வேற போல.

  • ஆரூர் ரங் -

    முதலில் ஒரு தாழ்த்தப்பட்டவரை திமுக முதல்வராக ஆக்கி விட்டு பிறகு சமூகநீதி பேசலாம். 1967 முதல் இன்றுவரை காத்திருக்கிறார்கள்.😛 முக்கியமாக மாப்பிள்ள ராசா ஆவலுடன் இருக்கிறாராம்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்