ADVERTISEMENT
சென்னை-நகரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில், ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்ட அனுமதி பெற, புதிய இணையதளம்துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி வழங்க, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் டி.டி.சி.பி.,க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுகிறது.இதற்கு தீர்வாக, ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் வாயிலாக, 60 நாட்களுக்குள் பொது மக்களுக்கு கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
.இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:புதிய இணையதளம் துவக்கப்பட்டு இருந்தாலும், அதில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முகவரி உள்ளிட்ட விஷயங்கள், பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் விண்ணப்பங்கள் நிலை, திட்ட அனுமதி விபரங்களை அறிய வழி இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்காக, சி.எம்.டி.ஏ., தரப்பில் புதிய இணையதளம் உருவாக்கி, மே 10 முதல் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது, டி.டி.சி.பி.,யில், www.onlineppa.tn.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், பொது மக்கள் எப்படி புதிய கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள், மாதிரி விண்ணப்பம், வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
.இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:புதிய இணையதளம் துவக்கப்பட்டு இருந்தாலும், அதில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முகவரி உள்ளிட்ட விஷயங்கள், பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் விண்ணப்பங்கள் நிலை, திட்ட அனுமதி விபரங்களை அறிய வழி இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இணைய தளத்தை செயலிழக்கச் செய்து விடுவார்கள்.