Load Image
dinamalar telegram
Advertisement

உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: காங்., புகாருக்கு பா.ஜ., மறுப்பு

ஜெய்ப்பூர்-ராஜஸ்தானில், கன்னையா லால் கொலையில் கைதான முக்கிய குற்றவாளி, பா.ஜ.,வை சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டை அக்கட்சி மறுத்துள்ளது.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரில் கன்னையா லால் என்பவர், கழுத்தறுத்து கொல்லப்பட்டார். அவரை கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Tamil News

அபத்தம்



இந்நிலையில், ரியாஸ் அக்தாரி, ராஜஸ்தான் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது சாதிக் கான் உடன் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இதை குறிப்பிட்டு, கன்னையா லால் கொலையில் பா.ஜ., வினருக்கு தொடர்பு உள்ளதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. இதை முகமது சாதிக் கான் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:தற்போது சமூக வலைதளங்களில் தலைவர்களுடன் படம் எடுத்து வெளியிடுவது சகஜம். என்னுடன் ரியாஸ் அக்தாரி படமெடுத்துக் கொண்டார் என்பதற்காக அவர் பா.ஜ.,வை சேர்ந்தவர் என கூறுவது அபத்தம். ரியாஸ் அக்தாரி, 2013ல் வாங்கிய மோட்டார் சைக்கிளில், 2611 என்ற பதிவு எண்ணை கேட்டு வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த 2008ல் மும்பை தாக்குதல் நடந்த, நவ., 26ம் தேதியை குறிக்கும் வகையில் ரியாஸ் அக்தாரி, வாகன பதிவு எண்ணை வாங்கிஉள்ளார்.இதில் இருந்தே அவரது பயங்கரவாத பின்னணியை புரிந்து கொள்ளலாம். முதல்வர் அசோக் கெலாட், தன் அரசின் தோல்வியை மறைக்கவும், மக்களை திசை திருப்பவும், கன்னையா லால் கொலையாளி பா.ஜ.,வை சேர்ந்தவர் என்ற சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Latest Tamil News

தாக்குதல்



கொலையாளிகளைஜெய்ப்பூரில் உள்ள என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் அதிகாரிகள் நேற்று ஆஜர் படுத்தினர். அவர்களை, வரும் 12 வரை என்.ஐ.ஏ., காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், அவர்கள் வெளியில் அழைத்து வரப்பட்டபோது, அங்கு கூடியிருந்தவர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்; அவர்களது உடைகளை கிழித்தனர். போலீசார் உடனடியாக சுதாரித்து, அவர்களை வாகனத்தில் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, டெய்லரை கொலை செய்தது போல், பா.ஜ., தலைவர்கள் சிலரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, விசாரணையின் போது, கொலையாளிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்