ADVERTISEMENT
புதுச்சேரி-பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மக்களுக்கு துணிப்பைகளை எம்.எல்.ஏ.,க்கள் வழங்கினர்.பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை, கப், உரிஞ்சு குழல், கொடி, தர்மாகோல் தட்டு, பிளாஸ்டிக் ஸ்பூன், காது குடையும் குச்சி, தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் குச்சி பொருத்திய பலுான், ஐஸ்கிரீம் குச்சி,, பரிசு, உணவு பொருள் மீது சுற்றும் பிளாஸ்டிக் தாள், தெர்மகோலால் செய்த அலங்கார பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உழவர்கரை நகராட்சி மக்களிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.லாஸ்பேட்டை உழவர்சந்தையில் நேற்று கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமையிலும், மார்க்கெட் பகுதியில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமையிலும் வியாபாரிகள், மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தி துணிப்பை வழங்கினர்.நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். லாஸ்பேட்டை, கருவடிகுப்பம் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!