Load Image
dinamalar telegram
Advertisement

மழை நீர் வடிகாலில் கழிவு நீர்குடிநீர் வாரியம் அட்டூழியம்

Tamil News
ADVERTISEMENT
மாதவரம், :மழைநீர் வடிகாலில் கழிவுநீரை பாயவிட்டு, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால்களில் கழிவு நீர் விடுவது தொடர் கதையாகி உள்ளது. தனியாரின் அட்டூழியத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், அனைத்து மழை நீர் வடிகால்களும், கழிவு நீர் கால்வாயாக மாறி விட்டன.தற்போது, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினரும், மேற்கண்ட அட்டூழியத்தை செய்கின்றனர். சென்னை மாதவரம் மண்டலம், 29வது வார்டு, தணிகாசலம் நகர், 80 அடி சாலையில், பிரதான மழைநீர் வடிகால் உள்ளது.அதில், தனியார் மட்டுமின்றி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினரும், இப்போது, கழிவு நீர் விடுகின்றனர்.நேற்று காலையிலும், கொளத்துார் சுற்றுவட்டாரங்களில் உள்ள வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அகற்றப்பட்ட கழிவுநீரை, பெரிய டேங்கர் லாரியில் கொண்டு வந்து, மேற்கண்ட மழை நீர் வடிகாலில் விட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மேற்கண்ட பிரச்னையால், தங்கள் பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படும் என, அதிருப்தி அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement