Load Image
dinamalar telegram
Advertisement

சென்னையில் திரவுபதியுடன் இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே சந்திப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை : ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் அதிமுக மற்றும் பா.ஜ., தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அதிமுக சார்பில், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.


ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு எதிர்க் கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் சென்னை வந்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Latest Tamil News
இந்நிலையில், திரவுபதி முர்மு மதியம் புதுச்சேரி வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரினார்.


தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Latest Tamil News
தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோரினார். அவரை, அதிமுக சார்பில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேடையில், திரவுபதியுடன் பழனிசாமி, ஜெயக்குமார், பொன்னையன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகே ந்திரன், வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர்கள் முருகன் ஆகியோர் அமர்ந்துள்ளனர். அதிமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Latest Tamil News

விழாவில் பேசிய பழனிசாமி, அதிமுக முழுமையாக ஆதரவு அளித்து திரவுபதி இமாலய வெற்றி பெற துணை நிற்போம். பழங்குடியின பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரவுபதியை ஆதரிக்காமல் சமூக நீதி என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். கடந்த 2012 தேர்தலில் திமுக காங்கிரஸ் சூழ்ச்சியால் சங்மா வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


Tamil News
Tamil News
Tamil News


இந்த நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பேசும் போது, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனார் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். மேலும் அவர், வரலாற்று சிறப்பு மிக்க தமிழகத்திற்கு வந்ததில் பெருமை. தமிழகத்தில் இருந்து பல சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டனர் என்றார்.

Latest Tamil News
இதனை தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் அக்கட்சியினர் திரவுபதிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


Latest Tamil News

தொடர்ந்து அங்கு வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் நடராஜன், மகன் ரவீந்திரநாத்துடன் வந்த பன்னீர்செல்வம், திரவுபதியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Comment Here வாசகர் கருத்து (10)

 • Tamil - Trichy,இந்தியா

  இது இனத்துக்கான போட்டி இல்லை பழனிச்சாமி...... இந்தம்மாதான் ஜெயிப்பாங்கனு தெரிந்தும் எதிர்க்கும் வொருவருக்கு ஆதரவு என்பதுதான் தில்லா சமூக அக்கறை கொண்டமுடிவு. வெள் டன் ஸ்டாலின்.

 • r ravichandran - chennai,இந்தியா

  பிஜேபி கட்சியை பொறுத்தவரை அதிமுக வின் ரெண்டு பிரிவுகளையும் சமமாக தான் பார்க்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் ஒபிஸ் அவர்களை கைவிடவில்லை.

 • மதுமிதா -

  நல்ல வேளை திரு ஜனாதிபதி ஒற்றை தலைமை தான் வெற்றி பெறும் அங்கே எப்படி?

 • SUBBU,MADURAI -

  ராம்நாத் கோவிந்த்,திரௌபதி முர்மு,நம் பாரத பிரதமர்மோடி தேர்ந்தெடுத்த ஜனாதிபதிகளுக்கு என்னவொரு பெயர் பொருத்தம்.ராம்நாத் இலங்கையின் ராஜபக்சே என்ற இராவணனை அழித்த இராமாயண கதாபாத்திரம்.திரௌபதி என்கிற பாஞ்சாலி திமுக என்ற துரியோதனனையும்,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,முலீக்,விசிக,நாதக,மநீமை,மநேமக,ம.வாழ்வுரிமை கட்சி போன்ற கௌரவர்களையும்,சகுனி என்ற ஓசிச்சோறு கி.வீரமணியையும் அழிக்க சபதம் எடுத்த மகாபாரத கதாபாத்திரம்.

  • gopi -

   இந்த கருத்தை படித்தவுடன் குமட்டி கொண்டு வந்தது....

 • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

  பிஜேபி செல்லப்பிள்ளை உத்தமர் OPS எங்க காணோம்

Advertisement