இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி நேற்று பர்மிங்காமில் துவங்கியது. இந்திய அணி புதிய கேப்டனாக பும்ரா களமிறங்கினார். கபில்தேவுக்கு அடுத்து, 35 ஆண்டுக்குப் பின் கேப்டன் ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

பூம்.. பூம்.. பும்ரா
இந்தியா 400 ரன்களை கடக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், பிராட் வீசிய 83 ஓவரில் வரலாற்று சாதனையை நிகழ்த்தி காட்டினார் பும்ரா. அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' முறையில் 5 ரன்களை பெற்றுத்தந்தது. 'நோபால்'லாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். 5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன் விளாசப்பட்டது. பும்ரா மட்டும் 29 ரன் (4,6,4,4,4,6,1) விளாசினார்.
லாரா சாதனை முறியடிப்பு:
கடந்த 2003ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் பந்து வீச்சில், ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார் லெஜண்ட் வீரர் பிரைன் லாரா. அந்த சாதனையை ஜார்ஜ் பெய்லி (ஆஸி., - 2013) மற்றும் கேசவ் மகாராஜ் (தெ.ஆ - 2020) சமன் செய்தார்களே தவிர யாரும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், பிராட்டின் ஒரே ஓவரில் 29 ரன் விளாசியதன் மூலம், 19 ஆண்டுகளாக முடியடிக்கப்படாத லாராவின் சாதனையை, கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்.
நம்ப முடியவில்லை.அருமை. பும்ரா பேட்டிங் செய்வாரா? அருமை.