Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ., தேசிய செயற்குழு கூடியது: கோலாட்டம் ஆடிய குஷ்பு

ஐதராபாத்: பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் இன்று ஐதராபாத்தில் கூடியது. நுபுர்சர்மாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்த நிலையில் நடக்கும் பா.ஜ., கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
Latest Tamil News

பிரதமர் மோடி தலைமையின் கீழ் 8 ஆண்டுகள் ஆட்சி நிறையும் தருவாயில் இன்னும் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தை பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Latest Tamil News
19 மாநில பா.ஜ., ஆளும் முதல்வர்கள், மூத்த தலைவர்களான அமித்ஷா, நிதின்கட்காரி ,வசுந்த்ரா ராஜே, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நாளை (ஜூன்-3) நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும், அங்கு எற்பட்டுள்ள ஊழல் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Tamil News

முத்து மாலை அணிவிப்பு



கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு தெலுங்கானாவில் புகழ் பெற்ற முத்து மாலை அணிவிக்கப்பட்டது. தலைவர்கள் வரும் போதும் பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். நடிகை குஷ்பு அங்கு நடந்த பாரம்பரிய தெலுங்கானா கலாசார கலைஞர்களுடன் கோலாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடினார்.



வாசகர் கருத்து (8)

  • Venugopal S -

    பாவம் குஷ்பு, பாஜகவில் பெரிய பதவியை எதிர்பார்த்து சேர்ந்து கடைசியில் இந்தப் பதவி தான் கிடைத்தது.

  • TRUBOAT - Chennai,இந்தியா

    நமீதா / காயு / மதுவந்தி / புஷ்பா இவர்கள் எல்லாம் என்ன ஆடுவார்கள். அப்ப நிகழ்ச்சி கலகட்டத்து போல. மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் இதெல்லாம் எப்ப நடக்கும்...

  • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

    அவருக்கும் பிஜேபி க்கும் பிடித்த விளையாட்டுதான்

  • sankar - சென்னை,இந்தியா

    குஷ்பம்மா, உனக்கு சீக்கிரம் நல்ல பதவி கிடைக்கும்.

  • Sri Srinivasa Perumal ThiruKoil - Tiruchchirappalli,இந்தியா

    நாளை ஜூலை 3. தவறுதலாக ஜுன் 3 என்று பதிவிட்டு இருக்கிறீர்கள். தவறை திருத்தி கொள்ளவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்