Load Image
Advertisement

வயோதிகர்கள் இசை கற்பதால் என்ன பயன்? சொல்கிறது உளவியல்

 வயோதிகர்கள் இசை கற்பதால் என்ன பயன்? சொல்கிறது உளவியல்
ADVERTISEMENT
வயோதிகர்களுக்கு ஏற்படும் மன இறுக்கம் பலவகைப்படுகிறது. டிமாண்டியா, அல்சைமர், ஸ்கேசோஃபெர்னியா உள்ளிட்ட வயோதிகள்களுக்கு ஏற்படும் பெரும்பாலான மனநோய்கள் வயோதிகம் காரணமாக மூளைத்திறன் குறைவதால் உண்டாகிறது. இதனைத்தடுக்க இசை முக்கியப்பங்கு வகிக்கிறது. இசைமூலம் மூளையை ஆரோக்கியமாக வைப்பது எப்படி, இசை மனதை எவ்வாறு இளமை ஆக்குகிறது, வயோதிகத்தில் இசை கற்பதால் என்ன பயன் எனப் பார்ப்போமா?
Latest Tamil News

*ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் பிடித்த இசை கேட்பது மனதுக்கு புத்துணர்வு அளிக்கும். நீங்கா தனிமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

*மூளையின் கார்ப்பஸ் கொலோசம் பகுதியைத் தூண்டி சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். இதனால் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனது உற்சாகமாகும்.

*இசைக் கருவிகளை இசைப்பது, பிடித்த பாடல்களைப் பாடுவது மூளையின் சென்சரி நரம்புகளைத் தூண்டும். இதனால் எண்ண ஓட்டம் சீராகும்.

*பியானோ, வயலின், செலோ உள்ளிட்ட இசைக்கருவிகளை மேலை நாட்டில் ஓய்வு பெற்ற வயோதிகர்கள் பலர் 60 வயதுக்கு மேல் கற்கத் துவங்குகின்றனர்.

*இதுபோல புதிய இசைக் கருவியை கற்பதால் மனம் புத்துணர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல் கவனம் அதிகரிக்கும். மன நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
Latest Tamil News

*இசைக்கலைஞர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் இறுதியில் மன அழுத்தமின்றி மூளைத் திறனுடன் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை இவர்கள் இசையுடனே செலவிடுவதால் இவர்களது எண்ண ஓட்டம் சீராகி இவர்கள் மன நிம்மதியுடன் தங்கள் இறுதி காலத்தை கழிப்பது குறிப்பிடத்தக்கது.

*இசையுடன் தொடர்பற்றவர்களும் வயதான காலத்தில் இசை கற்கலாம். இதனால் மூளை ஆரோக்கியம் மேம்படுவதோடு, சமூகத்திலும் புதிய அடையாளம் கிடைக்கும்.

*வயோதிகர்களில் சிலர் 60 வயதுக்கு மேல் இசை கற்கத் துவங்கி இசைத்துறையில் சாதனை படைத்த கதைகளும் உண்டு. இசை மனிதர்களுக்குள் உள்ள பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வருவதால் இதனை வயோதிகர்கள் கற்பது நன்மைதரும்.


வாசகர் கருத்து (1)

  • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

    உருப்படியான சிறு கட்டுரை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement