Load Image
dinamalar telegram
Advertisement

ஆண்களை கண்டாலே பிடிக்காது: 2 மாணவியர் தற்கொலை முயற்சி

மதுரை: திருச்சி மற்றும் திருநெல்வேலி சட்டக்கல்லுாரி மாணவியர் இருவர், 'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது' என, கடிதம் எழுதி வைத்துவிட்டு, மதுரையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

Latest Tamil News


மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில், 22 வயதுடைய பெண்கள் இருவர் நான்கு நாட்களாக தங்கி இருந்தனர். நேற்று காலை அறை கதவு திறக்காததால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் வீரர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
மாணவியர் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
உடனடியாக, அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

அண்ணா நகர் போலீசார் கூறியதாவது:
இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே தோழியராக உள்ளனர். பள்ளி படிப்பிற்கு பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இதில், ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலி சட்டக்கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது.

Latest Tamil News

இதனால், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதில், ஒரு மாணவிக்கு பெற்றோர் வரன் பார்க்க ஆரம்பித்த நிலையில், அதிர்ச்சியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து மதுரை வந்தனர்.

'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது. நாங்கள் இறந்த பிறகு ஒரே குழியில் எங்களை அடக்கம் செய்யுங்கள்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்துள்ளனர்.இவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (15)

 • தமிழ் -

  ஏன் இவர்கள் ஆண் இல்லாமலேயே பொறந்துட்டாங்களா

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  முன்னாலேயெல்லாம் ஆம்புளைங்கள் ஏமாத்திருவாங்கன்னு பார்த்து பார்த்து வளர்ப்பாங்க. இப்போ பொம்புளகூட சேர்ந்தே பொம்புளை புள்ளைங்களும் நாசாமியிர கூடாது என்று பார்த்து வளர்க்க வேண்டிய தேவை. ....பொம்புளைங்க கூட பழகுறதுக்கு ஆம்புளை பயன்கூடவே பழகிட்டு போ ன்னு விட்டுறது தன சரியோ....

 • S.kausalya - Chennai,இந்தியா

  இரு பெண்கள் நண்பர்கள் என்றாலே கொச்சையாக தான் pesuvaargalaa? எங்கள் பணியிடத்தில் இரு பெண்கள் 50 வயதுக்கும்மேல் பட்டவர்கள் இருந்தனர். ஒருவர் அங்கு சில காலமாக3 அங்கு பணி புரிந்தவர். மற்றவர் மாறுதலில் அங்கு வந்தவர். இருவருக்கும் நீரிழிவு நோய். எனவே மதியத்தில் ஒரு அறையில் சிறிது ஓய்வு எடுக்க ஆரம்பித்தனர். உடனே அவர்கள் இருவரையும் இதே போன்று அசிங்கமாக பேச ஆரம்பித்தனர். அவர்கள் மிக மன வேதனை அடைந்து ஓய்வே வேண்டாம் என்ற நிலைக்கு வந்தனர். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி பெரிய பிள்ளைகள் உண்டு. இந்த சமுதாயம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   பணியிடத்தில் ஓய்வு ? ..... அப்படியென்றால் அரசு அலுவலகமாகத்தான் இருக்க வேண்டும் .... அதுவும் மாநில அரசு .......

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இப்படி மனோதைரியம் இல்லாதவர்கள் 'சட்டம்' படித்து என்ன பயன்? சட்டப்படிப்பு படிக்க வருபவர்களுக்கு, முதலில் மனோதைரியம் இருக்கவேண்டும். நான் கூறியது மனோதைரியம், அசட்டு தைரியம் இல்லை. அப்படி மனோதைரியம் இல்லாதவர்கள் சட்டம் படித்து பட்டம் வாங்கி என்ன பயன்? எப்படி அவர்கள் நீதிமன்றத்தில் தைரியமாக தங்கள் வழக்குகளில் போராடி வெற்றிபெறுவார்கள்?

 • அப்புசாமி -

  இவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அவர்களைப் பொறுத்த வரையில் சரியான முடிவே. அடுத்தவர் முடிவுகளை கொச்சைப்படுத்தும் வழக்கம் இந்தியாவில்தான் உள்ளது.

Advertisement