Load Image
dinamalar telegram
Advertisement

தேச விரோத செயலில் ஈடுபடுகிறார்! ஜெகத்ஸ் கஸ்பர் மீது போலீசில் புகார்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : 'தேச விரோத செயலில் ஈடுபட்டு வரும், ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில தலைவராக இருப்பர் டெய்ஸி தங்கையா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: சென்னையில், ஜூன் 19ல் நடந்த சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டு இயக்கம் நடத்திய கூட்டத்தில், விடுதலை புலிகள், கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதரவாளரான ஜெகத் கஸ்பர் ராஜ் பேசுகையில், 'முஸ்லிம்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஒன்றுபட்டு தனி நாடு கோர வேண்டும்' என, தேசத்திற்கு விரோதமாக பேசியுள்ளார்.Latest Tamil News
நம் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் நோக்கத்திலும், மக்களிடம் வன்முறையை துாண்டும் விதத்திலும் தொடர்ந்து அவர் பேசி வருகிறார். இவர், மக்களிடம் தீய எண்ணங்களை விதைத்து வருகிறார். நாட்டை துண்டாட, தேச விரோத சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில், வன்முறையை துாண்டி, தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ஜெகத் கஸ்பர் ராஜ் மீது, தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (44)

 • bal - chennai,இந்தியா

  இவர்களை உள்ளே ள்தூக்கி போடா முடியாது..உடனே மெழுகு வர்த்தி ஏந்திக்கொண்டு ஒரு பாவாடை கூட்டம் வீதியில் வந்துவிடும்.

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  மாலத்தீவிலிருந்த தப்பி வந்தவன். செய்வதெல்லாம் அட்டூழியம். இவருக்கு அருட்தந்தை என்ற பட்டம் வேறு

 • Bala - chennai,இந்தியா

  இத இவர் பாகிஸ்தானில் போய் இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளை பிரிச்சு குடுத்துருன்னு கேக்க முடியுமா? இஸ்ரேல் போய் பாலஸ்தீனர்களுக்கு அவர்கள் இடத்தை பிரித்து குடுத்துவிடுங்கள்ன்னு பேச முடியுமா? அமெரிக்காவுல போய் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேணும்னு கேட்கமுடியுமா? இந்தோனேசியா போய் பாலி தீவுல இந்துக்கள்தான் அதிகம் வசிக்கிறாங்க அதனால இந்துக்களுக்கு பாலி தீவை பிரிச்சு குடுத்துருன்னு கேட்கமுடியுமா? இந்த ஆள் இலங்கை தமிழர் என்று நினைக்கிறேன். இலங்கைல தமிழர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு வேணும்னு கேட்கமுடியுமா? எதுவுமே முடியாது. இந்தியாவுலதான் அதுவும் தமிழகத்துல என்ன வேணும்னாலும் பேசலாம். ஏனென்றால் பேச்சுரிமை, மனித உரிமை, மதசார்பின்மை, ஜனநாயகம் என்ற போர்வையில் உருட்டுவானுங்க

 • Yogeshananda - Erode,இந்தியா

  இந்த ராஸ்கலை அரஸ்ட் செய்ய கைலாகத அரசாங்கம் நடத்தும் வெளிநாட்டு கைக் கூலிகள்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  விடியலின் ஆசீர்வாதத்தால் செயல் படுபவர்கலய் போலீசு என்ன செய்ய முடியும். அவர்களுக்கு நாற்காலி கொடுத்து உட்காரவைத்து சோமபானம் முதலீயவற்றால் குளிர்விக்கமுடியும்.இஙகும் தமிழ்நாட்டிலும் இப்போர் உள்ள சூழ் நிலையில் தொண்டார்களும் ராஸ்தான் மும்பையை நிகழ்வுகள் மாதிரி தானென செயல் படுகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement