ADVERTISEMENT
மதுராந்தகம்-மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில், மோசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத உற்சவத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.நடப்பு ஆண்டிற்கான இந்த விழா, ஜூன் 28ம் தேதி துவங்கியது. இதன் தேரோட்ட விழா நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!