Load Image
dinamalar telegram
Advertisement

கேள்வியை எப்ப கேட்கணும்!

Tamil News
ADVERTISEMENT

'கேள்வியை எப்ப கேட்கணும்!'



ஒற்றை தலைமை விவகாரத்தால், -சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு சலசலப்புடன் நடந்து முடிய, பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம்,
சென்னையில் இருந்து காரில், அரியலுார் வழியாக தஞ்சாவூர் சென்றார்.அவரது ஆதரவாளர்கள், பெரம்பலுார் மற்றும் அரிய லுாரில் வரவேற்பு அளித்தனர். அரியலுாரில் பேட்டி அளித்த வைத்திலிங்கத்திடம், 'பன்னீர்செல்வம், சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உண்டா?' என, நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, 'இது இப்ப கேட்கிற கேள்வி இல்லை' என்று மட்டும் சொல்லி விட்டு, வைத்திலிங்கம் புறப்பட்டார். இளம் நிருபர் ஒருவர், 'அப்ப இந்த கேள்வியை எப்ப கேட்கணும்னு வைத்தி சொல்லிட்டு போயிருக்கலாமே...' என, அப்பாவியாய் கேட்டார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவங்க தரப்பு, கட்சியில கொஞ்சம் ஓரமா ஒட்டிக்கிட்டு இருக்காங்க... சுத்தமா கழற்றி விட்ட பிறகு, இந்த கேள்வியை நாம கேட்க வேணாம்... அவங்களா நம்மை அழைத்து பதில் சொல்வாங்க...' எனக்கூற, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இல்லை மறைவு காய் மறைவாக ஓடிக்கொண்டிருக்கும் டீல் முடிந்தால் தானே பூனைக்குட்டி வெளியே வரும்

Advertisement