Load Image
dinamalar telegram
Advertisement

”சமத்து குட்டி” என கொஞ்ச வைக்கும் குழந்தையின் வைரல் வீடியோ..!

Tamil News
ADVERTISEMENT
குழந்தைகள் என்றால் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும். குழந்தைகள் செய்யும் அழகான குறும்புத்தனங்களும், சேட்டைகளும் தான் அவர்களது அடையாளமாகவும் இருக்கும்.
குறும்புக்கார குழந்தைகள் அடிப்படையிலேயே கற்பனைத் திறனை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் சுற்றி இருப்பவற்றை சுயமாக அறியவும், மாற்றி அமைக்கவும் முயற்சிக்கின்றனர்.
சில குழந்தைகள் நம்மை கவருவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சில குழந்தைகளின் செயல்கள் மூலம் நம்மை பிரமிக்க வைப்பார்கள். அதுபோல குழந்தை ஒன்று, சறுக்கி விளையாடும் ஸ்லைடில், தனது தந்தையின் முதுகில் கை வைத்து தள்ளிவிடுகிறது.
பின்னர் தானும் அந்த ஸ்லைடில் ஏறி, தனது முதுகில் தானே கை வைத்து தன்னையும் தள்ளிக் கொண்டு சறுக்கி செல்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அந்த குழந்தையையும், குழந்தையின் செயலையும் பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement