
தேவையான பொருட்கள்
ராகி மாவு - ஒரு கப்
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கடலை மாவு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த வாழைப்பூவை வெங்காயத்துடன் கலக்கவும். முன்னதாக 10 நிமிடங்கள் மோரில் ஊறவைத்து எடுத்தால் வாழைப்பூவின் துவர்ப்புத் தன்மை குறையும். இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறியவாறு பிசையவும். வெங்காயமும், வாழைப்பூவும் உப்புடன் கலந்து மிருதுத்தன்மை பெற வேண்டும். அப்போதுதான் பக்கோடா கடைகளில் கிடைப்பது போன்று மிருதுவாக, மொறுமொறுவென்று வரும்.
இந்தக்கலவை 10 நிமிடங்கள் ஊறிய பின்னர், சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துப் நன்றாகப் பிசைய வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக ராகி மாவையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகளவு சேர்க்கக்கூடாது. தேவைப்படும் போது சிறிது தெளித்துக் கொண்டு பிசையலாம்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும், அதில் பக்கோடா மாவை கைகளால் சிறிது சிறிதாக உதிர்த்துப் போடவும்.
நன்றாக வெந்தவுடன் எடுத்தால் இப்போது வாழைப்பூ பக்கோடா ரெடி. இதில் பொட்டுக்கடலை அல்லது வேர்க்கடலை சிறிது சேர்த்துக் கொண்டால் சுவை அள்ளும்; குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!