பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகர். 1682ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலைக்கழகத்தில் படித்து லுாதரன் தேவாலயத்தில் கிருத்துவ மதபோதகராக இவர் பணியாற்றினார். டென் மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவரும் கென்ரிக் என்பவரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த பகுதியில் மதபோதகராக பணிபுரிய கடந்த 1706ம் ஆண்டு இந்தியா வந்தார். இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படைப்புகளை வெளியிட்டார். இவர் பைபிளின் "புதிய அத்தியாயத்தை" தமிழில் 1715 ம் ஆண்டு மொழி பெயர்த்தார். இவர் 1719 ம் ஆண்டு மறைந்தார்.

விலைமதிப்பில்லாத இந்த பைபிளானது காணாமல் போய்விட்டதாக கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு போலீசில் கொடுத்த ஒரு புகாரானது கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புராதானமான பைபிள் களவுபோனது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. வெளிநாட்டிலுள்ள சிலைகள் மற்றும் கலைபொருட்களை விரைந்து மீட்கும் முயற்சியாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு, டிஐஜி ஜெயந்த் முரளி, உத்தரவின் பேரில், ஐ ஜி தினகரன், காணாமல் போன இந்த பைபிளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.

சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் பல்வேறு புலன் விசாரணையில் மேற்படி பைபிள் சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது எவ்வாறு, யார் மூலம் அங்கு சென்றது என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த புத்தகத்தால் என்ன பயன் ??? 10 பைசவுக்கு பிரயோஜனம் கிடையாது. அது அந்த ஊரிலேயே கிடக்கட்டும். நம் பண்டைய தமிழ் இலக்கியங்கள் போல் வருமா ??? அல்லது நமது 5000 வருட பழமையான இதிகாசங்களாகிய ராமாயணம், மஹாபாரதம் போல் வருமா ???