மஹாராஷ்டிராவில் 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றிப்பெற்றது. தேர்தலுக்கு முன்பாக ஆட்சி அதிகாரத்தை இருகட்சிகளுக்கும் அளிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்ததாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதற்கு பா.ஜ., தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. முதல்வர் பதவிக்காக இரு கட்சிகளும் 30 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். இந்த நிலையில் சிவசேனாவின் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்களுடன் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து மஹா., கவர்னரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனை ஏற்ற கவர்னர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனாவை சேர்ந்தவருக்கு பா.ஜ., முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்திருப்பது குறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: புதிய அரசாங்கத்தை அமைத்தவர்கள், சிவசேனாவை சேர்ந்தவரை முதல்வராக்கி இருப்பதாக சொல்கிறார்கள். தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் அல்ல. நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இதையே தான் சொன்னேன். எனக்கும் அமித்ஷாவுக்கும் இடையே இதே பார்முலா முடிவு செய்யப்பட்டது.

ஷின்டே சேனா 2 னுடைய தலைவர் உதவதாக்கரே சேனா 1 இன்னுடைய தலைவர் கட்சி பறிபோய் விட்டது கட்சிக்கொடியும் சின்னமும் பறிபோக போகிறது இனிமேல் செல்லாக்காசு