ADVERTISEMENT
புதுடில்லி: எம்.ஜி.ஆர்., நோக்கத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு செயல்பாடுகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது:

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் செயல்பாடு எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது. கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அதிமுக சட்ட திட்டங்களுக்கு எதிராகவும், கட்சி அதிகாரங்களை முடக்குவது போலவும் உள்ளது.
கட்சி தலைமை குறித்து விவாதிக்கக்கூடாது என்ற உத்தரவு தனிப்பட்ட ஒருவருக்கு வீட்டோ அதிகாரம் வழங்குவது போல் உள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவு செயல்படுத்தப்பட்டால், அதிமுக.,வில் உள்ள ஜனநாயகம் சீர்குலைக்கப்படும். பன்னீர்செல்வம் தரப்பு நடவடிக்கைகள் அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராக உள்ளது.

2,190 உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். இதனால், ஒற்றை தலைமை குறித்த விவாதத்திற்கு பன்னீர்செல்வம் முன்வரவில்லை. ஒற்றை தலைமை தான் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க முடியம் என நம்புகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பழனிசாமி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பழனிசாமிக்கும் கும்பலுக்கும் கொஞ்சம் கூட மூளையே கிடையாது. இவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயா பேர்களையும் இப்போது தான் நினைவுக்கு வருகிறதா. இத்தனை நாளும் நீங்கள் கோடி வைத்தகாரில் பவனி வந்தது அவர்கள் போட்ட பிச்சை. தின்ன சோறும் அவர்களால் தான். ஆனால் பன்னிரு அப்படி அல்ல. தின்ற வீட்டுக்கே நன்றி கேட்ட தனமாக நடக்க எப்படி தான் மனது வந்ததோ. இனி உங்கள் கனவுகள் எல்லாம் முடிந்து விட்டது. இனிகோடி போட்ட காரில் போகிற மாதிரி கனவு தான் காணலாம் நிஜத்தில் நடக்காது. ஆனால் பன்னிரு போவார் கண்டிப்பாக.பழனிசாமி தேர்தலுக்கு பச்சை துண்டை கட்டி நான் விவசாயி என்று தம்பட்டம் அடிப்பார் இனிமேல் அந்த தொழிலுக்கு போக வேண்டியது தான்.