Load Image
dinamalar telegram
Advertisement

வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,186 ஆக விற்பனை ஆகிறது.

'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.1,018.50க்கும், வணிக பயன்பாட்டிற்கான ஒரு சிலிண்டர் ரூ.135 குறைந்து ரூ.2,373 ஆக விற்பனையானது.
Latest Tamil Newsஇந்நிலையில், இன்று (ஜூலை 1) முதல் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2 ஆயிரத்து 186க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து (6)

  • DVRR - Kolkata,இந்தியா

    அப்போ இதுக்கும் எதிரிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தவேண்டியது தானே??இவ்வளவு விலை குறைந்தால் காஸ் வியாபாரம் முடங்கிவிடும் என்று சொல்லி

  • Ragam -

    108 க்கு‌ம் 187.க்கும் என்ன ஒரு வித்தியாசம், ஏதோ புது அவசர சிகிச்சை எண் போல உள்ளது. கோடி அதிகமாக்கி. விட்டு பின்னர் தூசி குறைத்தது யாருக்கு என்ன பயன்?

  • தமிழன் - madurai,இந்தியா

    ஆஃகா, இனிமே ஹோட்டல்காரன், ரேஷன் அரசி இட்லி, தோசை, மைதாமாவு புரோட்டா வெலய லம்ப்பா கொறச்சுடுவான்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எங்க நம்ம எதிர்க்கட்சி காரங்க, இதுவரைக்கும் இந்த விலைகுறைப்புக்கு ஒன்னும் 'குறைக்கவில்லை' விலை ஏறினா மட்டும் உடனே சத்தமா 'குறைக்க' ஒட்டுமொத்தமா கிளம்பி வந்துடுவாங்க...

  • அப்புசாமி -

    யாருமே இன்னும் மெடல் குத்திக்க, மெடல் குத்தி விட முன்வரலையே? அண்ணமலை முதலில் வாங்க. மோடிதான் ஜெர்மெனியில் ஜி -7 நாடுகளோட பேசி தமிழ்நாட்டில் விலை குறைக்கச் செய்தார்னு மெடல் குத்துங்க. அதே மாதிரி ஸ்டாலின், இ.பி.எஸ், ஓ.பி.எஸ், விஜயகாந்த் அடிப்பொடிகளும் அவிங்கவிங்க தலைவர்களுக்கு நன்றி தெரிவிச்சு போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்