Load Image
dinamalar telegram
Advertisement

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Tamil News
ADVERTISEMENT
வெள்ளி முதல் வியாழன் வரை (01.07.2022 - 07.07.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்:



சூரியன், சுக்கிரன், புதன், நன்மையை வழங்குவர். விநாயகரை வழிபடுங்கள்.

அசுவினி: செயல்களில் வேகம் உண்டாகும். யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.

பரணி: அரசு வகையிலான செயல்கள் ஆதாயத்தை உண்டாக்கும். தொழில் சுமாராக செல்லும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செலவிற்கேற்ற வருமானம் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வாரத்தின் முற்பகுதி சுமாராக சென்றாலும் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். கவனமுடன் செயல்படுங்கள்.

ரிஷபம்:



Latest Tamil Newsகுரு, சுக்கிரன், கேது, நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கார்த்திகை 2, 3, 4: வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் உங்களுடைய முயற்சிகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலிதமாகும். ஞாயிறு முதல் சிந்தித்து செயல் படுவதால் நன்மைகள் உண்டாகும்.

ரோகிணி: நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் . ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்தவற்றில் நன்மையான பலன்களை காண்பீர்கள்.

மிருகசீரிடம் 1, 2: லாப குருவால் வருவாய் அதிகரிக்கும். மனம் குழப்பத்திலிருந்து விடுபடும். திடமான சிந்தனையுடன் தைரியமாக செயல்பட்டு நினைத்தவற்றில் நன்மைகள் அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகும். ஆதாயம் அதிகரிக்கும்.

மிதுனம்:



செவ்வாய், ராகு, சுக்கிரன் முன்னேற்றத்தை வழங்குவர். பிரத்தியங்கிரா தேவியை மனதில் எண்ணி வழிபட்டு வர நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 3, 4: வெள்ளி சனிகளில் செயல்களில் இழுபறி இருக்கும். டென்ஷன் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்ததில் சாதகமான நிலையை அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

திருவாதிரை: செயல்கள் இழுபறி ஆனாலும் லாபஸ்தான ராகுவும் செவ்வாயும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். வராமல் இருந்த பணம் வசூலாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3: குடும்ப நலனில் கவனம் செல்லும். சேமிப்பில் இருந்து புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும். அந்நியர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும்.

கடகம்:



குரு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவார்கள். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி செயல்படுங்கள்.

புனர்பூசம் 4: வெள்ளி சனியில் முயற்சிகள் வெற்றியாகும். ஞாயிறு முதல் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. அடுத்தவரை நம்பி எந்த பணிகளையும் ஒப்படைக்க வேண்டாம். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். தொழிலில் வருமானம் அதிகரிக்கும் நிதி நிலை உயரும்.

பூசம்: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மையாகும். குரு அருளால் உங்களுடைய நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தி்ல் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆயில்யம்: செயல்களில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகுவதுடன் வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். தொழில் ஆதாயமாக செல்லும்.

சிம்மம்:



Latest Tamil Newsசூரியன், புதன், கேது நன்மைகளை வழங்குவார்கள். இஷ்ட தெய்வ வழிபாடு வாழ்வை வளமாக்கும்.

மகம்: வெள்ளி சனியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். ஞாயிறு முதல் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு கூடும்.

பூரம்: குடும்ப வழியில் செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதனால் சங்கடம் அடைவீர்கள் என்றாலும் உங்கள் செல்வாக்கு உயரும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 1: ஞானக் காரகனின் அருளால் ஆலய தரிசனம் மேற்கொள்வீர். நீண்ட நாட்களாக மனதை வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் விலகும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசு பணியாளர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட செயல்கள் சாதகமாகும்.

கன்னி:



குரு, சுக்கிரன், சூரியன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். ஸ்ரீரெங்க நாதரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

உத்திரம் 2, 3, 4: வெள்ளி சனிகளில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் சேமிப்பு உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஞாயிறு திங்களில் வெளியூர் பயணமும் ஆடம்பர செலவுகளும் உண்டாகும். செவ்வாய் முதல் சிந்தித்து செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

அஸ்தம்: வாரத்தின் தொடக்கமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். வருவாய் அதிகரிக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஞாயிறு முதல் ஆலய வழிபாடு, உறவினர் வீடுகளுக்கு செல்லுதல் என்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

சித்திரை 1, 2: விருப்பங்கள் நிறைவேறும் வாரம் இது. வரவுகள் அதிகரித்து நிதி நெருக்கடிகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வேலையை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

துலாம்:



சுக்கிரன் நன்மையை வழங்குவார். காளத்தீஸ்வரரை மனதில் நினைத்து செயல்பட்டுவர சங்கடங்கள் விலகும்.

சித்திரை 3, 4: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். சட்டத்திற்கு புறம்பான செயல்களைத் தவிர்ப்பது நன்மையாகும். வாரத்தின் முற்பகுதியில் சந்திர பலத்தினால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சி ஆதாயமாகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.

சுவாதி: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்தாலும் வாரத்தின் முற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். பிற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் நெருக்கடிகள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம்.

விசாகம் 1, 2, 3: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரம். உறவுகளும் பகையாவர். நண்பர்களும் எதிரியாவர் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுங்கள். வாரத்தின் முற்பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். நினைத்தவை நிறைவேறும் அதன்பின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்:



குரு, ராகு, புதன், செவ்வாய் நன்மையை வழங்குவார்கள். திருத்தணி முருகனை மனதில் எண்ணி வழிபடுங்கள்.

விசாகம் 4: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர்கள். குரு பலத்தால் உங்கள் செல்வாக்கு உயரும். நிதிநிலை சீராகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். குடும்பத்தில் நன்மையான நிலை உண்டாகும்.

அனுஷம்: யோகமான வாரம் இது. பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு நன்மைகளை வழங்குவர். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தொழிலை விருத்தி செய்து லாபம் காண்பீர்கள். ராசி நாதன் ஆட்சி பெற்றிருப்பதால் புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். துணிச்சலாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

கேட்டை: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் முயற்சிகளில் ஆதாய நிலை உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இடம், வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு:



கேது நன்மைகளை வழங்குவார். விநாயகப் பெருமானை மனதில் எண்ணி செயல்பட சங்கடங்கள் விலகும்.

மூலம்: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை என்பதால் உங்கள் செயல்களில் விழிப்புணர்வு தேவை. வெள்ளி சனிகளில் சந்திராஷ்டமம் என்பதால் சிந்தித்து செயல்படுங்கள். ஞாயிறு முதல் உங்கள் முயற்சிகள் பலன் அளிக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். உங்களை மட்டும் நம்பி செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.

பூராடம்: வாரத்தின் தொடக்கம் சந்திராஷ்டமத்துடன் தொடங்குகிறது என்பதால் வெள்ளி, சனிகளில் உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகள் வேண்டாம். ஞாயிறு முதல் ஓரளவிற்கு நன்மைகளைக் காண்பீர்கள் என்றாலும் உறவினர்கள் நண்பர்கள் என்று யாருடைய உதவியையும் எதிர்பார்க்க முடியாமல் போகும். ஒவ்வொன்றையும் கடுமையான முயற்சிக்குப் பிறகே அடைவீர்கள்.

உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். முதல் இரண்டு நாட்களும் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் விழிப்புணர்வு தேவை. ஞாயிறு முதல் உழைப்பு அதிகரிக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். முயற்சிகளில் இழுபறியான நிலையை சந்திப்பீர்கள். கடுமையான முயற்சிகளுக்குப் பின் சில நன்மைகளை அடைவீர்கள்.

சந்திராஷ்டமம்: 30.6.2022 மாலை 6.27 மணி - 3.7.2022 அதிகாலை 5.24 மணி

மகரம்:



சூரியன், சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். நள்ளாற்று நாயகனை மனதில் நினைத்து செயல்படுங்கள்.

உத்திராடம் 2, 3, 4: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெள்ளி சனிகளில் உங்கள் விருப்பப்படி செயல்பட்டு எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஞாயிறு திங்களில் உங்கள் செயல்களில் சங்கடத்தையும் பின்னடைவையும் காண்பீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை முதல் நெருக்கடிகள் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

திருவோணம்: முயற்சிக்கேற்ப செயல்களில் வெற்றி காண்பீர்கள். முதல் இரண்டு நாட்களிலும் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். ஞாயிறு திங்களில் செயல்களில் சங்கடமும் நெருக்கடிகளும் உண்டாகும். செவ்வாய்க்கிழமை முதல் உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றாய் நிறைவேறும்.

அவிட்டம் 1, 2: செயல்களில் இருந்த சங்கடங்கள் விலகும். வெள்ளி சனிகளில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் கருத்துடன் ஒத்துப் போவீர்கள். ஞாயிறு திங்களில் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். நெருக்கடிகள் அதிகரிக்கும். முயற்சிகள் தள்ளிப்போகும். செவ்வாய்க்கிழமை முதல் சிந்தித்து செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 3.7.2022 அதிகாலை 5.25 மணி - 5.7.2022 மதியம் 2.11 மணி

கும்பம்:



குரு, ராகு, செவ்வாய், சுக்கிரன், நன்மைகளை வழங்குவார்கள். குல தெய்வத்தை மனதில் எண்ணி செயல்படுங்கள்.

அவிட்டம் 3, 4: முயற்சிகள் வெற்றி பெறும் வாரம் இது. வெள்ளி முதல் திங்கள் வரை உங்கள் செயல்களில் எளிதாக வெற்றி காண்பீர்கள். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய்க்கிழமை மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அது முதல் நிதானமும் அமைதியும் அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.

சதயம்: செவ்வாய்க்கிழமை மதியம் வரையில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் லாபம் தரும். தைரியத்துடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள் அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிலைமை மாறும். நெருக்கடிகளும் சங்கடங்களும் தோன்றும் என்பதால் செயல்களில் நிதானம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றாலும் பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். செவ்வாய்க்கிழமை மதியம் வரையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நிறைவேறி ஆதாயத்தை வழங்கும். அதன்பின் உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மையைக் காண முடியாமல் போகும்.

சந்திராஷ்டமம்: 5.7.2022 மதியம் 2.12 மணி - 7.7.2022 இரவு 8.32 மணி

மீனம்:



சுக்கிரன், புதன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்க்கை வளமாகும்.

பூரட்டாதி 4: முயற்சிகள் வெற்றிபெறும் வாரம் இது. மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுடன் செயல்படுவீர்கள். பணி நிமித்தம் ஒரு சிலர் வெளியூர் செல்ல வேண்டி வரும். தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சி வெற்றி பெறும். வரவு செலவுகளில் ஏற்பட்ட சிக்கல் தீரும். புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

உத்திரட்டாதி: மனதில் தெளிவு உண்டாகும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

ரேவதி: நன்மைகள் நடந்தேறும் வாரம் இது. எதிர்பார்த்த செயல்கள் ஆதாயமாகும். பூர்வீக சொத்துகள் விவகாரம் முடிவிற்கு வரும். அஷ்டம கேது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதால் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். விலகிச் சென்றவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். பண வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம்: 7.7.2022 இரவு 8.33 மணி - நாள் முழுவதும்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement