Load Image
dinamalar telegram
Advertisement

சசிகலாவின் சொத்து இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி முடக்கம்

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை சசிகலாவின் சொத்துக்கள் ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Latest Tamil News

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்தனர். இது தொடர்பாக வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் 4 ஆண்டு சிறைக்காலம் முடிந்து வெளியே உள்ளார்.
Latest Tamil News
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை தி நகரில் உள்ள சசிகலா பினாமி பெயரில் செயல்பட்ட ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை முடக்கியது. இதன் மதிப்பு ரூ. 15 கோடி ஆகும். இதுவரை சசிகலா மற்றும் அவரது பினாமி பெயரில் ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (33)

  • ஆரூர் ரங் -

    ஜெயா வின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை நீண்ட கால குத்தகைக்கு😛 எடுத்துள்ளார். அதன் கதி என்ன?

  • bal - chennai,இந்தியா

    அவ்வளவு முடக்கியும் இன்னும் ஆடம்பரம் இருக்கிறதென்றால் எவ்வளவு இன்னும் இருக்கும்...ஒரு வீடு வேளைக்கு வந்தவங்ககிட்ட இவ்வளவா.இதுதான் டொமிழ்நாடு...இவங்க அடுத்த முதல்வர். மக்கள் வோட்டு போடுவாங்க.

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    வீட்டு வேலைக்கு போன பொம்பள இவ்ளோ சம்பாத்தியம் , நானும் என்னோட ஐடி வேலைய வுட்டுட்டு வீட்டு வேலைக்கு போய்டலாமான்னு நெனைக்கிறேன் . இந்த அம்மாதான் அடுத்த முதல்வரம் - என்ன கொடுமைடா சாமி . அனால் கள்ள ரயில் ஏறி சென்னை வந்தவன் விட ரொம்ப கம்மி - சட்டம் சாமானியனுக்கு மட்டுமே ....

  • Manjunathan Shan - Sydney,ஆஸ்திரேலியா

    இதெல்லாம் J J வுக்கு தெரியாத

  • Indhuindian - Chennai,இந்தியா

    சைபர சரியாப்போடுங்க கம்மியாபோட்டு அவமானப்படுத்தாதீங்க

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்