ADVERTISEMENT
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, 95 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஐந்து தனியார் தொழிற்பேட்டைகளை உருவாக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, தமிழ்நாடு சிட்கோ எனும், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் தொழிற்பேட்டைகளை அமைத்து வருகிறது. தமிழகத்தில், 8,342 ஏக்கர் பரப்பளவில், 127 தொழிற்பேட்டைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு தொழிற்பேட்டைகளை உருவாக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், தனியார் தொழிற்பேட்டைகளும் உருவாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, சிட்கோ அதிகாரிகள் கூறியதாவது:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க, நகருக்கு வெளியே தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. தனியார் தொழிற்பேட்டைகள் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. இதன்படி, தொழிற்பேட்டை திட்ட மதிப்பில் 50 சதவீதம் என்ற அளவில், 15 கோடி ரூபாய்க்கு மிகாமல் மானியத்துடன், புதிய தொழிற்பேட்டை அமைக்க அரசு உதவி செய்கிறது.
இதன்படி, தற்போது கோவை, விருதுநகர் மாவட்டங்களில், இரண்டு தனியார் தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மதுரை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 95 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து தனியார் தொழிற்பேட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஊழல் ராணியின் ஆட்சியில் இருண்டுபோன தமிழகம் மீட்சிப்பாதையில் இதோ... வாழ்க திராவிடமும் அதன் வளர்ச்சிப்பாதைகளும்....