Load Image
dinamalar telegram
Advertisement

புதிய போராட்டத்திற்கு தயாராகும் அரசுப்பணியாளர்கள்!

Tamil News
ADVERTISEMENT
மதுரை : தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் புதிய பென்ஷன் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டை கடந்தும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசுப் பணியாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கருதுகின்றனர். குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அகவிலைப்படி நிலுவை ஆகியவை முக்கியமானதாக கருதுகின்றனர்.

கடந்த முறை ஜெயலலிதாவும் தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து குறித்து கூறியே வெற்றி பெற்றார். அவர் காலத்திலும் திட்டம் ரத்தாகவில்லை. தற்போதைய தமிழக நிதியமைச்சர் தியாகராஜனும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமற்றது என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தார். இது அரசுப் பணியாளர் சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Latest Tamil News
இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் அவ்வப்போது மாநில அளவில் கூடிபேசி வருகின்றனர். நாளை (ஜூலை 2) காலை 10:00 மணிக்கு மதுரையில் மாநில செயற்குழு கூட்டத்தை மாநில தலைவர் குமார் தலைமையில் கூட்டியுள்ளனர்.

மாவட்ட தலைவர் ஜெயகணேஷ் கூறுகையில், ''எங்களின் முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். புதிய அரசு பொறுப்பேற்று ஓராண்டை கடந்தும் எவ்வித பலனும் கிடைக்காததால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (18)

  • ஆரூர் ரங் -

    சட்டமன்ற தேர்தலில் தேர்தல் அலுவலர்களாக இருந்து திமுக வுக்கு சாதகமாக 420 வேலைகளுக்கு ஊக்கம் கொடுத்த அரசு அலுவலர்களுக்கு😉🙃 இதுவும் வேணும். இன்னமும் வேணும்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    எல்லாம் தனியார் மாயம் ஆகி விடப்பட வேண்டும்.உண்மையான திறமை உள்ளவர்கள் முன்னேறுவர்.இட ஒதுக்கீடு ஒழிய வேண்டும்.

  • கோகுலன் -

    ஓய்வூதியம் எதிர்பார்ப்பு நியாயமானதே,

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    வெட்டியாக அமர்ந்துகொண்டு லஞ்சங்கள் வாங்கி வட்டித்தொழில் செய்யும் அரசு ஊழியர்களுக்கு செய்ததெல்லாம் போதும்... முதலில் நிர்வாக சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் பிறகு கருணை காட்டலாம்...

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    எவ்ளோ கொடுத்தாலும் பண ஆசை யாரையும் விட்டு வெக்குறதில்ல... அரசு ஊழியர்கள் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறியே...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்