ADVERTISEMENT
காட்டுமன்னார்கோவில்-சம்பா சாகுபடிக்கு 13 லட்சம் ஏக்கர் கூடுதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். தனித் துணை கலெக்டர் உதயகுமார் வரவேற்றார்.கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், டி.ஆர்.ஓ., கிருஷ்ணன், ஆர்.டி.ஓ., ரவி, ஊராட்சி தலைவர் தெய்வசிகாமணி முன்னிலை வைத்தனர்
.அமைச்சர் பன்னீர்செல்வம் ஆயிரத்து 83 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் பெறலாம்.குறுவை சாகுபடியில் 5.50 லட்சம் ஏக்கர் அதிக மகசூல் இலக்கு வைத்து வெற்றி அடைந்துள்ளோம். 61 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்பு வழங்கி,விவசாயிகளை ஊக்கப்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.சம்பா சாகுபடிக்கு13 லட்சம் ஏக்கர் கூடுதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்படவுள்ளது. முதல் கட்டமாக 600 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பணிகளை முடித்துக்கொள்ளலாம். முட்டம் ஊராட்சியில் இப்பணி முதல் கட்டமாக துவங்கியுள்ளது.தமிழக முதல்வர் விவசாய புரட்சி செய்து வருகிறார். தமிழக விவசாயிகள் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பேசினார். முகாமில் அனைத்து துறைகள் சார்பில், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.முகாமில் 435 மனுக்கள் பெறப்பட்டு, 250 ஏற்கப்பட்டது. 123 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 62 பரிசீலனையில் உள்ளது. தாசில்தார் தமிழ்செல்வன்,அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தாசில்தார் வேணி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!