Load Image
dinamalar telegram
Advertisement

விக்கிரவாண்டி கும்பகோணம் 4 வழி சாலை நிறைவு எப்போது?

Tamil News
ADVERTISEMENT
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் (வி.கே.டி.,) செல்லும் 164.275 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக (என்.ஹெச்.45 சி) மாற்ற மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு 2586.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டத்தினை விரைந்து முடிக்க 711 கோடி ரூபாயில் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரை உள்ள 66 கி.மீ., துாரத்திற்கு மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்பிராஸ்டெக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. அதே போல் 956.23 கோடி ரூபாயில் சேத்தியாத்தோப்பிலிருந்து சோழபுரம் வரை உள்ள 50.480 கி.மீ., துாரத்திற்கும்; 918.87 கோடி ரூபாயில் சோழபுரத்திலிருந்து தஞ்சாவூர் வரை 47.835 கி.மீ., துாரத்திற்கும் குஜராத் மாநிலம் வதோராவைச் சேர்ந்த படேல் இன்பிராஸ்டெக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

35 சதவீத பணிகள்
இதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரை 66 கி.மீ., துார சாலையில் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான 4கோவில்கள் உட்பட 36 கோவில்கள் அகற்றப்பட வேண்டும். மேலும், ஆறுகள், சிறு நதிகள், பாசனவாய்கால்கள் செல்ல 90 சிறு பாலங்கள், சாலையின் இருபுறமும் உள்ள கிராம மக்கள், வாகனங்கள் பைபாஸ் சாலையை பாதுகாப்பாக கடந்து செல்வதற்காக 25 இடங்களில் தரைப் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றின் குறுக்கே 2 பெரிய பாலங்கள். கோலியனுார் கூட்ரோடு, பண்ருட்டி பைபாஸ், வடலுார் பைபாஸ் ஆகிய இடங்களில் 3 ரயில்வே மேம்பாலம் மற்றும் வடலுார் மருவாய் கிராமம் அருகே பைபாசில் மேம்பாலம் ஒன்றும் அமைக்க திட்டமிட்டது.ஆனால், இதுவரை 35 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. பெரிய அளவில் பணிகள் நடைபெறவில்லை.

'பேட்ச் ஒர்க்'
இதற்கு காரணம், டெண்டர் எடுத்த மும்பை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போதிய ஆள் பலமும், இயந்திர பலமும் இல்லை. இதனால், அந்நிறுவனம், துணை ஒப்பந்தமாக அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் வசம் பணியை மேற்கொள்ள ஒப்படைத்தனர்.ஆனால், துணை ஒப்பந்ததாரர்களும் சரிவர பணியை செய்யாததால் தொய்வு ஏற்பட்டுள்ளது.மேலும், வீராணம் குடிநீர் பைப் லைன் உள்ள பகுதிகளில் 35 கி.மீ., துாரத்திற்கு பைப் லைன் பகுதியை மாற்றி அமைக்க கால அவகாசம் அதிகமானதாலும், இதனிடையே கொரோனா தொற்று காரணமாக வட மாநிலத்தவர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியதாலும் பணிகள் நடைபெறவில்லை.இதனால், சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் 'பேட்ச் ஒர்க்' பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சாலை பணி முழுமை அடைந்தபாடில்லை.

அறிவுறுத்தல்
சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது குறித்து பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலின், கடலுார் மாவட்ட அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் பன்னீர்செல்வம், நகாய் நிறுவனத்தினரிடம் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.நகாய் நிறுவனம், மும்பை ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர்களிடம் பணியை விரைந்து முடிக்க வரும் செப்டம்பர் மாதம் வரை காலக்கெடு வழங்கியுள்ளது.

ஒப்பந்தம் ரத்து?
மெத்தனமாக பணியில் ஈடுபடும் ரிலையன்ஸ் ஒப்பந்தத்தை முழுதுமாக எவ்வித நிபந்தனையுமின்றி ரத்து செய்து விட்டு, விரைந்து முடிக்க முன்வரும் நிறுவனத்திடம் பணியை ஒப்படைக்க வேண்டும்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

20 நாளில் 3 விபத்துகள்

வாணியம்பாளையம் முதல் வி.அகரம் வரை ஒரு புறம் சாலை போடப்பட்டு மறுபுறம் சாலை இணைக்கப்படாததால் இப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த 20 நாட்களில் இதுவரை 3 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 2 பேர் இறந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement