Load Image
dinamalar telegram
Advertisement

முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே: பா.ஜ., முழு ஆதரவு

Tamil News
ADVERTISEMENT
மும்பை: மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், பா.ஜ.,வின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சில சிவசேனா எம்எல்ஏ.,க்கள் அதிருப்தி தெரிவித்ததுடன் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், கவர்னரின் உத்தரவு செல்லும் என, நேற்றிரவு தீர்ப்பளித்தது. இதையடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
Latest Tamil Newsஇந்த நிலையில் ஷிண்டேவுக்கு ஆதராக உள்ள எம்எல்ஏ.,க்கள் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் தரப்பு ஆதரவு கடிதத்துடன் மும்பை வந்த ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸை சந்தித்தார். பிறகு இருவரும் சேர்ந்து கவர்னர் இல்லத்திற்கு சென்று ஆட்சியமைக்க உரிமைக் கோரினர். அப்போது பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஆகியோருக்கு கவர்னர் பகத்சிங் கோசியாரி இனிப்பு ஊட்டினார். பின்னர் நிருபர்களிடம் பட்னவிஸ் கூறியதாவது: 2019ல் மஹாராஷ்டிர மக்கள் பா.ஜ.,வின் ஆட்சியையே விரும்பினர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தலுக்கு பின் உத்தவ் தாக்கரே மீறினார்.
Latest Tamil Newsபால் தாக்கல் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் செயல்பாடு ஹிந்துத்துவா, சாவர்க்கரை அவமதிப்பதாக இருந்தது. 2019ல் சிவசேனா எங்களுக்கு துரோகம் செய்தது. 2019ல் மக்களின் தீர்ப்பை அவமானப்படுத்தி விட்டு மஹா., விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டது. மஹாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார். இவரின் பதவியேற்பு இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும். அவருக்கு பா.ஜ., முழு ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கியது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து (45)

 • சீனி - Bangalore,இந்தியா

  தேசம் முழுதும் குடும்ப ஆட்சிகள் முடிவுக்கு வந்தால் தான், மக்களுக்கு முழு விடுதலை கிடைக்கும்.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அப்போ சந்திரசேகர் பிரதமர் ஆனா கதிதானோ

 • sankaseshan - mumbai,இந்தியா

  BJP, s main strategy is to weakn sena 1 further. வேகமாக கவர்னர் செயல் பட்டதால் நீ திரு திரு வென்று முழிக்கிறாய் மேலும் ஒரு ஷாக் மகாராஷ்டிரா கட்டுமரம் பவார் பல்டி அடித்தார் புதிய அரசுக்கு NCP முழு ஆதரவு

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  இதய திருட்டு திராவிடன் செஞ்சா அதுக்கு பேரு ராஜதந்திரம்

 • Raja - Coimbatore,இந்தியா

  பலிக்கு ஆடு சிக்கிடுச்சு. எப்படியும் அடுத்த தேர்தல்ல பிஜேபி தனியா நின்னு ஜெயிக்க போகுது. அது தெரியாம இந்த ஆடு வழிய போய் தலையை கொடுத்திருக்கு. அதென்ன பிஜேபி ஆளுர மாநிலத்துல உள்ள ஆளுநர்கள் மட்டும் அரசுக்கு இணங்கி நடக்குராங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி ஒரு ஆளுநர் ரெட்டை குழல் துப்பாக்கியின் கைகளை பிடிச்சு கொடுத்தார். இன்னைக்கு அது ரெண்டும் ஒரு உறைல ரெண்டு வாளா நிக்குது. இவரு என்னடானா ஒரு படி மேல போய் இனிப்பு ஊட்டி விடுறார். கேட்டா ஆளுநர் பதவி அரசியல் சார்பற்றதுன்னு கதை விடுவாங்க. நமக்கு எதுக்கு இதெல்லாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்