Load Image
dinamalar telegram
Advertisement

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆபத்தானது: உயர்நீதிமன்றம்

Tamil News
ADVERTISEMENT
மதுரை: தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டது. அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil Newsதற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது. முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும். மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும். வழக்கு நாளைக்கு (ஜூலை 1) ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (20)

  • அன்பு - தஞ்சை,கனடா

    ஆசிரியர்களின் சம்பளம் ஏறிவிட்டதால், அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விட்டது. பத்து ஆசிரியர்கள் இருந்த இடத்தில, ஒரு ஆசிரியர் வேலை செய்கிறார். அதனால் தற்காலிக பணியில் இப்போது குறைந்த சம்பளத்தில் நியமிக்கிறது. எதுவாகினும் மாணவர்களுக்கு கல்வி முக்கியம். இல்லையெனில் தனியார் மாணவர்களுக்கு மட்டுமே முறையான கல்வி கிடைக்கும். ஏழை மாணவர்களும் கல்வி பயின்றால் தான் நாடு முன்னேறும். இல்லையெனில் நாடு குட்டிசுவராகிவிடும்.

  • அப்புசாமி -

    நிச்சயமாக. இவிங்களுக்கு கற்பிக்கவும் தெரியாது. முதல்ல முன்னூறு ரூவாய்க்கு சேருவாங்க. ரெண்டு வருஷத்தில் பணி நிரந்தரமாக்கணும். 25000 சம்பளம் தரணும்னு ரோட்டுல உக்காந்து போராடுவாங்க. கழிசடைகளை டீச்சர்கள வெச்சுக்குட்டு காலம்பூரா மாரடிக்கணும்.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    அக்னிபாதை திட்டத்தை எதிர்க்கும் திராவிட மாடல் ஆட்சி, ஏன் தற்காலிக ஆசிரியர் மாடலை கொண்டு வந்து சொத்து சேர்க்குது?😊😊

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    இதைவிட agnipath சிறப்பாக இருக்கிறது...இவர்கள் இப்படி செய்யும்ஆசிரியர் நியமனம் நிரந்தரம் அற்றது. ஒரு வருடம் அல்லது சில மாதங்கள் தான் வேலை. இதற்கு கழக மாவட்டம், வட்டம், சதுரம் ஆகியோருக்கு நன்கொடை சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும். நல்லபடியாக ஒரு தேர்வை நடத்த துப்பில்லாத அரசு.. காரணம்.அரசு திவால். முறையான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க நிதி கிடையாது.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பாடநூல்களை நீதிபதிகள் படித்துப்பார்த்தால் ......

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்