ADVERTISEMENT
சென்னை: மாலை போட்டதால் கடுப்பான அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அதற்காக, 'மாஜி' அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில், சென்னை வானகரத்தில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பழனிசாமிக்கு பொதுச்செயலர் பதவி வழங்க திட்டமிடப்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கால், பொதுச்செயலர் பதவி அறிவிப்பை வெளியிட முடியாமல் போனது. இதன் காரணமாக மன வருத்தத்தில் பழனிசாமி இருந்தார். அவைத் தலைவர் தேர்வு தொடர்பான தீர்மானத்தை வரவேற்க, பழனிசாமி பேசுவதற்கு எழுந்தார். அப்போது, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலர் என்ற முறையில், பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆளுயர பன்னீர் ரோஜா மாலையை அணிவிக்க முயன்றனர்.

இதனால் கடுப்பான பழனிசாமி, மேடையிலேயே, 'மாஜி' அமைச்சரை கடிந்து கொண்டார்; அங்கிருந்து விரட்டினார். அதிருப்தி அடைந்த பெஞ்சமின் மற்றும் ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், பொதுக்குழு முடிந்ததும், பெஞ்சமினை அழைத்து வர செய்து, இரண்டு கைகளையும் பிடித்து, பழனிசாமி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த புகைப்படத்தை, 'மாஜி' ஆதரவாளர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
யாரு இவரு கோப படறாரு மாலை போட்டதுக்கு. மாலை வாங்கி வர காசு கொடுத்ததே நாம பழனிச்சாமி அன்னத்தை இது கூட தெரியலையா.