Load Image
Advertisement

டவுட் தனபாலு

 டவுட் தனபாலு
ADVERTISEMENT
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி: அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவருமே வலிமையான ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளனர். அ.தி.மு.க., சின்னத்தை முடக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய நிலைப்பாட்டை பன்னீர்செல்வம் எடுக்க மாட்டார். அவரது தலைமையில் புதிய இயக்கம் உருவாக வாய்ப்பு இல்லை; அவர், பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்.


டவுட் தனபாலு: பன்னீர்செல்வத்தை பா.ஜ.,வில் போய் சேர்ந்துடுங்க என, நீங்களே வழியனுப்பி வச்சிடுவீங்க போலிருக்குதே... ஆனா, ஒண்ணு... அவர் அங்க போயிட்டார்னா, நாளைக்கு தேர்தல் நேரத்துல, கூடுதல் சீட்கள் கேட்டு, உங்களுக்கு குடைச்சல் தருவாருங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!


பத்திரிகை செய்தி: ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், ஆட்சி மன்ற குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமை நிலைய செயலர்கள் கூட்டம், சென்னை தாயகத்தில் நடந்தது. கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில், நீண்ட நெடிய பார்லிமென்ட் அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


டவுட் தனபாலு: யஷ்வந்த் சின்ஹா கொள்கை உறுதி மிக்கவரா... ஐ.ஏ.எஸ்., அதிகாரி வேலையை முழுசா பார்க்காம, வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு அரசியலுக்கு போய், மத்திய அமைச்சர் பதவிகளை அலங்கரிச்சார்... தேர்தலில், 'சீட்' தராத பா.ஜ., தலைமைக்கு எதிரா போர்க்கொடி துாக்கி, மம்தாவின் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தார்... எந்த கொள்கையில் அவர் உறுதியா இருந்தார்னு தான் எங்களுக்கு, 'டவுட்!'


ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், 'உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்' என செயல்படுகிறார். அவர், உதயநிதிக்கு பக்கபலமாக இருப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே சமயம், பள்ளிக் கல்வியையும் கவனிக்க வேண்டும்.



டவுட் தனபாலு: அவர், உதயநிதிக்கு பக்கபலமா இருப்பதால் தான், சீனியர்கள் வசம் போக வேண்டிய பள்ளிக்கல்வி துறையை, 'டவுட்'டே இல்லாம அவருக்கு குடுத்திருக்காங்க... 'பள்ளிக்கல்வியை எல்லாம் அதிகாரிகள் பார்த்துக்குவாங்க... நாம, உதயநிதிக்கு, 'ஐேலசா' போட்டுட்டு இருப்போம்'னு முடிவு பண்ணிட்டாரோ, என்னவோ?


வாசகர் கருத்து (5)

  • sankar - சென்னை,இந்தியா

    வளர்மதிக்கு அதிமுக பொதுச்செயளாலராவதற்க்கு வேண்டிய லட்சுமி கடாட்ஷ முகம், வாய்த்திறமை, செயல்திறமை எல்லாம் இருக்கு என்பதில் நம்ம டவுட் தனபாலுவுக்கே டவுட் இல்லை.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தோழருக்குத் தோள்கொடுப்பதைத் தவிர, துறை வேலையை செய்யவா அமைச்சரானார் ? 'அங்கு ' மூன்றாம் தலைமுறை, இங்கும் இவர் மூன்றாம் தலைமுறை சும்மா ஆனமட்டும் கல்லா கட்ட, அடுப்படியை பிடித்து வந்தவர்தான்

  • sankar - சென்னை,இந்தியா

    வளர்மதிக்கு அதிமுக பொதுச்செயளாலராவதற்க்கு வேண்டிய லட்சுமி கடாட்ஷ முகம், வாய்த்திறமை, செயல்திறமை எல்லாம் இருக்கு என்பதில் நம்ம டவுட் தனபாலுவுக்கே டவுட் இல்லை.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    மொத்தம் ரெண்டு பேர் (அப்பா வைகோ, மகன் துறை வையாபுரி) கலந்துக்கிட்டாங்களா ??

  • sankar - சென்னை,இந்தியா

    வளர்மதிக்கு அதிமுக பொதுச்செயளாலராவதற்க்கு வேண்டிய லட்சுமி கடாட்ஷ முகம், வாய்த்திறமை, செயல்திறமை எல்லாம் இருக்கு என்பதில் நம்ம டவுட் தனபாலுவுக்கே டவுட் இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement