ஏதோ விஷயம் இருக்கு!
'இவர் அரசியல் கட்சியின் தலைவரா இல்லை மத்திய அமைச்சரா...' என்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை பற்றி ஆத்திரத்துடன் கூறுகின்றனர், எதிர்க்கட்சியினர். பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிவர் நட்டா. இரண்டாவது முறை மோடி பிரதமராக பதவியேற்ற போது, அந்த அமைச்சரவையில் நட்டாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை; ஆனால், பா.ஜ.,வின் தேசிய
தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ், உத்தர பிரதேசம், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.சமீப காலமாக, டில்லியில் பணியாற்றும் வெளிநாடுகளின் துாதர்களுடன், நட்டா அடிக்கடி கலந்துரையாடி வருகிறார். டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்புகள் நடக்கின்றன. இதுவரை, 47 நாடுகளின் துாதர்களுடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார்.
கான்-கிராசு காரணுவோ கட்சி மட்டும் சீனாவோட ஒப்பந்தம் போடலாம்... சாதாரண எம்பியா இருக்கிற பப்பு நாடு நாடா போயி அரசின் முறையான அனுமதி இல்லாமல் அந்த நாட்டின் தலைவர்களுடன் பேசலாம்... இவரு பேச கூடாதா....