Load Image
dinamalar telegram
Advertisement

கிரைண்டர், மின்மோட்டார், எல்இடி லைட் மீதான ஜிஎஸ்டி உயர்வு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: கிரைண்டர், மின்மோட்டார், எல்இடி லைட் மீதான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது.

சண்டிகரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,கிரைண்டர், அரிசி அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 5ல் இருந்து 18 சதவீதமாகவும்

தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 1 8 சதவீதமாகவும்
எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி 12 ல் இருந்து 18 சதவீதமாகவும்

சூரிய சக்தி ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 ல் இருந்து 12 சதவீதமாகடும்Latest Tamil Newsகத்தி, பேனா, பிளேடு , ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும்
மீத்தேன் மீதான ஜிஎஸ்டி 5ல் இருந்து 12 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Latest Tamil NewsLatest Tamil News


வாசகர் கருத்து (6)

 • Sivagiri - chennai,இந்தியா

  வீட்டு உபயோக பொருள்கள் , நுகர்வோர் உபயோக பொருள்கள் , தங்க நகை , TV,AC,வாஷிங் மெஷின் , சைக்கிள், கூரியர் , மெடிக்கல்ஸ் , பேப்பர் , இவர்கள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் GST- கணக்கு சரியாக அரசுக்கு போயி சேர்கிறதா என்பது மிகப் பெரிய டௌட்டுதான் , பாதி கூட சரியான கணக்கு கிடையாது , ரூ 20000-00 டிவிக்கு ரூ3600-00 GST- வருகிறது , அந்த பில் பக்கா பில் போலத்தான் தெரிகிறது , ஆனால் பெரிய டௌட்டுதான் , . . . வரிசையாக ஊருக்கு ஊர் கடைகள் திறந்து கொண்டே செல்வதை பார்த்தால் வசூலிக்கும் GST-யில்தான் மஞ்சள் குளிக்கிறார்கள் போல தெரிகிறது , . . . தயாரிப்பு கம்பெனியில் இருந்தே பாதி பில் போட்டு அனுப்புகிறார்கள் , . . . ஆக இவை அனைத்தும் மக்கள் பையில் இருந்து சுரண்டப்பட்டு , அரசுக்கு போகாமல் , தயாரிப்பாளர்-டீலர்-சில்லறை விற்பனையாளர் கூட்டணியில் பாதியிலேயே அவர்கள் பிரித்துக் கொள்கிறார்கள் . . . இதை சொன்னா நம்மை பைத்தியக்காரன் என்கிறார்கள் . . .

 • சீனி - Bangalore,இந்தியா

  நகரங்களில் பெருபாலும் அரைத்த மாவை பாக்கெட்டில் வாங்கிகொள்வார்கள். ஆனா கிரைண்டர் வாங்க முடியாத கணவன்களுக்கு கூடுதல் பணிச்சுமை தான். இதை வெச்சு திமுக அரைத்த மாவையே இன்னும் மூனு மாசம் ஆட்டுவார்கள், என்ன செங்கல் மாதிரி கிரைண்டரை தூக்கிக்காட்ட முடியாது, தாய்குலங்கல் இதையும் இலவசமா கொடுக்கிறாங்க என வராதா லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள் என்பது தான் உண்மை.... ஹாஹாஹா.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இவங்க போடற GST வரிகளை கடைக்காரன் அப்பாவி நுகர்வோரிடம் கட்ட சொல்றான்.கடைக்காரனுக்கு என்ன கவலை? நாம தான் இங்க அழுகிறோம்

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  ஆமாப்பா ஆமாம். வரியை உயர்த்தத்தான் செய்வாங்க. பிரதமர் பதவியில் யாராக இருந்தாலும், அவ்வப்போது உயர்த்தி தான் ஆகணும். ஏன் ?? நஷ்டத்தில் இயங்கும் தேவையற்ற அரசு ஊழியருக்கு எப்படி சம்பளம், பஞ்சபடி, போனஸ், LTA, ஊதியஉயர்வு, பதவிஉயர்வு, ஓய்வூதியம் எங்கிருந்து கொடுப்பாங்க ?? தேவையற்ற மானியங்கள் வேறு எங்கிருந்து அளிக்கப்படும் ? அரசின் கஜானாவிலிருந்து தான். அரசின் கஜானாவிற்கு வருமானம் எப்படி வரும் ?? வரி மூலம் தான். சிவப்பு சட்டை போட்டவர் மற்றும் ஜாதி சங்கங்கள் மட்டும் பிரதமர் பதவிக்கு வந்தால், இதை தவிர வேற எதை செய்ய முடியும் ? இதே அரைத்த மாவு தான். இவையெல்லாம் கொடுக்காமல் இருந்தால், அரசு ஊழியர் தான் விட்டுவிடுவார்களா என்ன ஏற்கனவே பலமுறை சொல்லியாகிவிட்டது. அடுத்த சம்பள கமிஷன் வரும்போது, இன்னும் விலைவாசி உயரும் என்று. இப்போதே சிறிது சிறிதாக உயர்த்துகிறார்கள். பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன ?? நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கு செய்யவேண்டும். இந்த நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் இன்னும் தேவையா என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவற்றிற்கு தேவைப்படும் நிதி, மற்றும் அது எங்கிருந்து வரும் என்று. அதெல்லாம் விட்டுவிட்டு, இவர் வாழ்க, இவர் ஒழிக என்பதெல்லாம் நமது அறியாமையை தான் காட்டும். இது அரசியல் அல்ல, நிர்வாகம். இந்த நிலையில், சுமார் பத்து லட்சம் தேவையற்ற அரசு ஊழியர் வேலைவாய்ப்பை உருவாக்கினால், தனியார் ஊழியர் மற்றும் ஏழை பாழய் கதி அதோகதி தான். இப்போதே வரி சுமை தாங்க முடியவில்லை. இந்நிலையில், வேலியில் போகும் எதையோ எடுத்து மேலே விட்டுக்கொள்வது தேவையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement