Load Image
dinamalar telegram
Advertisement

நதிகளை வழிபடுவதே சனாதனம்: கவர்னர் ரவி

Tamil News
ADVERTISEMENT
வேலூர்: நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் எனக்கூறியுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள், இது தான் சனாதனம் எனவும் தெரிவித்துள்ளார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது: நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். 2016ல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
Latest Tamil News2025க்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 2021 செப்டம்பர் மாதத்திலேயே இலக்கை அடைந்து விட்டோம். இந்தியா 2030க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள்; இது தான் சனாதனம். பூமி ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
Latest Tamil Newsஅடுத்த 30 - 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்னை ஏற்படுகிறது. என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செய்யல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட்க்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள். 2047ல் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (27)

 • Ambalavanan Gomathinayagam -

  முற்றும் துறந்த சந்நியாசிகளுக்கும் சங்கம்.நாடு எங்கயோ போகிறது

 • Venugopal S -

  பாஜக தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சனாதனத்துக்கு அர்த்தம் மற்றும் விளக்கம் சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி விளங்கும்? எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து இதுதான் சனாதனம் என்று சீக்கிரம் ஒரு விளக்கத்தை சொல்லித் தொலையுங்கள்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  நதிகள் நமக்கு தாய் போன்றவை தாயை வனக்காதவர்கள் மூர்க்கர்களுக்கு சமம்

 • அப்புசாமி -

  எங்கேருந்தோ அடிச்சு உடறாரு. எல்லா நீர்நிலைகளையும் வழிபடுவது பண்டைய வழக்கம். நந்நீர் நிலைகளுக்கு சரஸ் என்று பெயர். அதன் கடவுள் சரஸ்வதி.

 • அப்புசாமி -

  எல்லா நீர்நிலைகளையும் வழிபடுவது பண்டைய வழக்கம். நந்நீர் நிலைகளுக்கு சரஸ் என்று பெயர். அதன் கடவுள் சரஸ்வதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்