Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ., ஆதரவாளர் வெட்டிக்கொலை ராஜஸ்தானில் வன்முறையால் பதற்றம்

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், பா.ஜ., ஆதரவு டெய்லர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை 'வீடியோ' எடுத்து வெளியிட்டதால், பல இடங்களில் வன்முறை ஏற்பட்டு, பதற்றம் நிலவுகிறது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உதய்பூரைச் சேர்ந்தவர் கன்னையா லால். டெய்லரான அவருடைய கடைக்கு நேற்று இரண்டு பேர் சென்றுள்ளனர். துணி தைப்பதற்கு வந்துள்ளதாக கூறி, அதை மொபைல் போனில் 'வீடியோ'வாக பதிவு செய்துள்ளனர்.
அப்போது அதில் ஒருவர் கன்னையா லாலை கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எச்சரிக்கை விடுத்து அவர்கள் அந்த வீடியோவில் பேசியுள்ளனர். இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியுள்ளது.
முஸ்லிம் மதம் குறித்து பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா கடந்த மாதம் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. நுாபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கன்னையா லாலுக்கு சில அமைப்புகள் மிரட்டல் விடுத்திருந்தன. இந்நிலையில் அவர் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டதால், உதய்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது.
உதய்பூரின் பல இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'இன்டர்நெட்' சேவையும் முடக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, கொலை செய்ததாக முகமது ரியாஸ் அன்சாரி, கவுஸ் முகமது என்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ''குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்,'' என, முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.கன்னையா லால் வெட்டிக் கொல்லப்படும் வீடியோவை பகிர வேண்டாம் என, மாநில போலீசும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement