பாலியல் தொழில்3 பெண்கள் மீட்பு
சேலையூர், :தாம்பரம் அருகே பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்களை மீட்ட போலீசார், அவர்களை அத்தொழிலில் ஈடுபடுத்திய நபரை தேடி வருகின்றனர். கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர், காளமேகம் தெவில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத ஆண்கள் அடிக்கடி வந்து சென்றதால், அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர்.நேற்று முன்தினம் இரவு, அங்கு வந்த ஆண்களை பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், வீட்டின் உரிமையாளரான, விஜய்சங்கர், 55 என்பவரிடம் விசாரித்ததில், ராஜகீழ்பாக்கத்தில் வசிக்கும் பைசல் என்பவருக்கு மாத வாடகைக்கு வீட்டை விட்டது தெரிய வந்தது. அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ஆவடியை சேர்ந்த ஒரு பெண் என, மூன்று பெண்களை மீட்ட போலீசார், அவர்களை சட்டவிரோத தொழிலில் ஈடுபடுத்திய பைசலை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!