Load Image
dinamalar telegram
Advertisement

கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு முயற்சி; முதல்வருக்கு புகார்

உடுமலை;'உடுமலை அருகே, கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயல்வோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.இது குறித்து கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில், அனுப்பியுள்ள மனு: உடுமலை கோட்டமங்கலத்தில், பழமை வாய்ந்த வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளது.ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், கோவில் அருகிலும், நிலத்திலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.அங்குள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, பாதை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்கவும், தேவையான இடங்களில், தகவல் பலகை வைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement